பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க போவது யாரு ? நீங்கள் நினைக்கும் அவரேதான்!

பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க போவது யாரு ? நீங்கள் நினைக்கும் அவரேதான்!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்க உள்ளது என்பது ஏற்கனவே அனைவருமே தெரிந்த ஒன்றுதான் ஆனால் யாரு பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க போகிறார்கள் என்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு டச்சு நிறுவனமான எண்டெமால் ஷைன் நிறுவனத்திடம் இருந்து பானிஜய் என்ற பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது. பானிஜய் உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவிக்காக சில தொடர்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மஞ்சள் மீடியா ஆகியவை பானிஜயுடன் இணைந்து OTT வலைத் தொடர் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளன. இதை மனதில் கொண்டு கமல்ஹாசன் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தயாரிப்பார் என்று வதந்தி பரப்பப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தகவல்களின்படி, பிக் பாஸ் 5 சீசனுக்கான அனைத்து உரிமங்களும் இப்போது பானிஜயிடம்தான் உள்ளன, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார், இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்