மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காரமடை அருகே, குருந்தமலையில், ஹிந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட, மிகவும் பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த, 29ம் தேதி, மங்கள இசை, கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. விழாவில் ஆறு கால யாக பூஜைகள் நடை பெற உள்ளன. இன்று (ஜூன் 1ம் தேதி) காலை, 6:30 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ராஜகோபுரம், மூலவர், பரிவார் தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை, 7:45 மணிக்கு துவங்கும் கும்பாபிஷேக நிகழ்வுகள், 8:45 மணிக்கு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், அபிஷேக பூஜையும் நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் மிராசுதாரர்கள், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.