Nandi statue in Tanjore Peruvudayar temple adjacent to Pradosham, dedicated to...

 பிரதோசத்தை ஒட்டி தஞ்சை பெருவுடையார் கோயிலில் நந்தி...

 

பிரதோசத்தை ஒட்டி தஞ்சை பெருவுடையார் கோயிலில் நந்தி சிலை, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன - திரளான பக்தர்கள் பங்கேற்பு
 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Today is Pradosha, Karthika Vratham;

இன்று பிரதோஷம், கார்த்திகை விரதம்; சிவன், முருகன்...

இன்று பிரதோஷம், கார்த்திகை விரதம்; சிவன், முருகன் வழிபாடு சிறப்பை தரும்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Pradosha worship at Rudrakodeeswarar temple

ருத்ரகோடீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைப்பெற்றது. இதில், சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Kumbabhishek ceremony started at Eral Meenakshi Amman temple

ஏரல் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

ஏரல் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷே விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

மீனாட்சி அம்மன் கோவில்

ஏரல் மீனாட்சி அம்மன் சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மங்கள இசை, மகா கணபதி அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாஹவாஜனம், சவுபாக்கிய மகா கணபதி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் நவகிரக ஹோமம், தனபூஜை, துர்கா ஹோமம், தீபாரதனை நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றியில் இருந்து தீர்த்தம் கொண்டு எடுத்து வரப்பட்டு, முதல் கால யாக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகம்

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மங்கள இசை, காலை 8.30 இரண்டாம் காலை யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, தீபாரதனை, காலை 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 5 மணிக்கு மங்கள இசை, விசேஷசந்தி, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, இரவு 8.30 மணிக்கு வேதிசார்ச்சனை, வேதபாராயணம், சிவ சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சி நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, தீபாரதனை, காலை 5.30 மணிக்கு மேல் யாத்திராதானம், கடம் புறப்படுதல், காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன், விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை 6.30 மணிக்கு மீனாட்சி அம்மன், சொக்கலிங்க சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெறுகிறது.

மகா அபிஷேகம்

காலை 8 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பகல் 11 மணிக்கு மகேஸ்வரர் பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வருதல். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொக்கலிங்க சுவாமி திருக்கோவில் பரம்பரை அறங்காவலர்கள், கைங்கர்ய சபா மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Paramankurichi Cashew Garden Thotammutharamman Temple Donation Ceremony

பரமன்குறிச்சி முந்திரி தோட்டம்முத்தாரம்மன் கோவில் கொடை விழா

உடன்குடி:

பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி கொடைவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம்காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல், நையாண்டி மேளத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படைக் கஞ்சி வார்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது, நேற்று காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜையுடன் உணவு பிரித்தல் நடைபெற்றது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Kayamozhi Ramanathapuram Sudalimada Swamy Temple Donation Ceremony

காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி உடனுறை இசக்கி அம்மன் கோவிலில் 39-வது வருசாபிஷேகம், கொடை விழா கடந்த 15-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவில் குடியழைப்பு பூஜை நடந்தது.

விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கொடை விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு சுனைநீர் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. காலை 11 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜையை தொடர்ந்து கோவில் விமானத்துக்கு புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டு நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு சாமக்கொடை, படைப்பு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு வரி பிரசாதம் அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Flag hoisting for Nalluran!

நல்லூரானுக்குக் கொடியேற்றம்! – பெருமளவு பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Sunlight shines on the lingam for only 3 days!

3 நாட்கள் மட்டுமே லிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி! சோழர்களின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை..

சோழர்களின் கட்டிடக்கலை, கட்டிடத் தொழில்நுட்பம் மற்றும் வானியல் ஆகியவற்றின் சிறந்த சான்றாக கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

After 5 years, Kurichi Koothandavar strolled through Thiruveedi!

5 ஆண்டுகளுக்கு பின் திருவீதி உலா வந்த குறிச்சி கூத்தாண்டவர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 200 ஆண்டு பழமையான குறிச்சி கூத்தாண்டவர் சாமி 'தலை', 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருவீதி உலா வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

 

மழை கொட்டித் தீர்த்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில், 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 

இக்கோயிலில், சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும், சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமான கூத்தாண்டவரின் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பிரமாண்டமான 'தலை' உருவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் சாமிக்கு முழு உருவ சிலை சிற்பம் இல்லை.

 

இந்த கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று சாமியின் தலையை பக்தர்கள் வழிபடுவதில்லை. பூசாரி மட்டுமே மாதத்திற்கு ஒரு முறை கோயிலுக்கு சென்று கூத்தாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.  

குறிச்சி கிராம மக்கள் ஒன்று கூடி, கூத்தாண்டவருக்கு திருவிழா எடுக்கும் தருணத்தில், கூத்தாண்டவர் சாமி புஷ்ப ரதத்தில் திருவீதி விழா வரும்போது தான், ஸ்வாமியின் தலையை பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்ய முடியும்.

 

5 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை குறிச்சி கூத்தாண்டவர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயிலிலிருந்து கூத்தாண்டவர் ஸ்வாமி 'தலை' திருவீதி உலா வருகை எதிர்பார்த்து, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிச்சி கிராம வீதிகளில் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவர் ஸ்வாமியின் பிரமாண்டமான தலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியோடு வழிபாடு நடத்தினர்.

 

கூத்தாண்டவர் திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து, சிலையை கோயிலில் மீண்டும் இறக்கி வைத்ததும், குறிச்சி கிராமத்தில் திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இது குறிச்சி கிராமத்தை சேர்ந்த சண்முகம், வாழப்பாடி அம்சா ஆகியோர் கூறியதாவது:

 

குருச்சி கிராமத்தில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வரும் 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் சாமி திருக்கோயில் உள்ளது.

 

இக்கோயிலில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட கூத்தாண்டவர் சாமி தலையை வைத்து பாதுகாத்து வருகிறோம். சக்தி வாய்ந்த தெய்வமான கூத்தாண்டவரை, திருவிழா உற்சவத்தின் போது தான் பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

 

மற்ற நாள்களில் கோயிலுக்கு சென்று கூத்தாண்டவரை வழிபடுவதில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வழிபாடு செய்தனர். 

திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து, சாமி கோவிலுக்குள் சென்றதும், எதிர்பாராத விதமாக மழை கொட்டி தீர்த்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இனி வரும் காலங்களில், ஆண்டு தோறும் கூத்தாண்டவர் திருவிழா நடத்திட, கிராம மக்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tiruchendur Nadar Street Chandanamari Amman Temple Donation Ceremony!!

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா!!

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கொடை விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

சந்தனமாரி அம்மன் கோவில்

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு ஜெய விநாயகருக்கும், சந்தனமாரி அம்மனுக்கும் மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய விநாயகருக்கும், சந்தனமாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி தீபாரானை நடந்தது.

பால்குடம் ஊர்வலம்

கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9.30 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இந்த பக்தர்கள் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு முளைப்பாரி வீதி உலா நடந்தது. இரவு 12 மணிக்கு சந்தனமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கொடை விழாவில், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, கவுன்சிலர் தினேஷ் கிருஷ்ணா, வக்கீல் சந்திரசேகரன், திருச்செந்தூர் தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், திருச்செந்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து, அ.தி.மு.க. நகர துணை செயலாளர் செல்வ சண்முக சுந்தர், திருச்செந்தூர் நாடார் தெரு இளைஞரணி தலைவர் சந்திரசேகர ஆதித்தன், தொழிலதிபர்கள் தங்கராஜ் நாடார், சின்னத்துரை அன் கோ முருகன், பி.பி.கார்த்திசன் நாடார், பட்டுராஜன், கே.பூவாசகனி, பி.சசிகலா, எஸ்.முரளி, காஞ்சனா, கே.ராஜரத்தினம், கே.பாலகிருஷ்ணன், கே.பாலசுப்பிரமணியன், கே.கார்த்திகேயன், லெட்சுமணன், பாலகுமார், முருகன், எஸ்.வி.ராஜா, சண்முகவேல் நாடார், செங்கல்பட்டு மாவட்ட சமத்து மக்கள் கழக செயலாளர் பழனிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் நீராட்டு

இன்று அதிகாலை 5 மணிக்கு படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாரானை நடக்கிறது.

விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திரைபட மெல்லிசை கச்சேரி, வில்லிசை, கரகாட்டம், இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பாஸ்கர், செயலாளர் நடராஜன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் தனசேகரன், துணை செயலாளர் சுந்தரேசன், கணக்காளர் பிரபு, நிர்வாகம் கமிட்டி உறுப்பினர்கள் செல்வ முருகன், செந்தில் ஆறுமுகம், அமிர்த குண விநாயகம், ராஜேஷ் கண்ணன், கணேசன், சுரேஷ், விக்னேஷ், அஜெய், சுபாஷ் முரளி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 67 )   NEXT |  LAST