ஆடி அமாவாசை நாளான நாளையும், ஆடிப் பூரமான வரும் 11ம் தேதியும் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. -இந்து அறநிலையத்துறை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் நடக்கும் ஆஷாதி ஏகாதசி விழா இந்த ஆண்டு பொலிவு இழந்து காணப்பட்டது. முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் அதிகாலையில் பூஜை செய்து விட்டல் பகவானை வழிபட்டார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஓம் நமச்சிவாய மந்திரத்தை ஏன் உச்சரிக்க வேண்டும் அதனால் பலன்கள் என்ன என்ன

ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். இந்த மந்திரம் கூறுவதும் உலகத்திலேயே உயர்ந்த பொருளை கூப்பிடுவதும் ஒன்றுதான். அந்த உயர்ந்த ஒன்று சிவபெருமான்தான்.

ஓம் நமச்சிவாய மந்திரத்தை கூறுவது சிவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இது உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக இருக்கும் பல பிரச்சினைகளை குணப்படுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை கூறுவது கோபம் மற்றும் மூர்கத்தனத்தை கட்டுப்படுத்தும். இது வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்துவதுடன், வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் உண்டாக்கும்.

இந்த மந்திரம் ஐந்து அக்ஷரங்கள் அல்லது மூலக்கூறுகளை கொண்டுள்ளது. அவை "ந", "ம", "சி", "வா", "ய" என்பதாகும். இது உணர்த்துவது என்னவெனில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் சிவபெருமான்தான் என்பதாகும். இதனை பற்றிய குறிப்புகள் யஜீர் வேதத்தில் உள்ளது.

மனதில் உண்மையான பக்தியோடு இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது ஒருவரின் ஆன்மாவை சுத்தப்படுத்தும். மேலும் அவர்களை நல்வழிப்பாதையில் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய உதவும்.

இந்த மந்திரத்தின் அதிர்வுகள் நமது மனதையும், ஆழ்மனதையும் விழிப்புடன் இருக்க வைத்து அதனை தெளிவடைய வைக்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறுவது மனஅழுத்தம், தூக்கபிரச்சினைகள் மற்றும் மனநோய்களை குணப்படுத்தும். மனஅழுத்தத்திற்கு இந்த மந்திரத்தை விட சிறந்த தீர்வு எதுவுமில்லை.

" அம் " என்பது நமது பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து கூறுவது நமக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலை எழுப்பும், நமது எண்ணங்கள் மற்றும் செயல்களை சீராக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 67 of 67 )   NEXT | LAST