Advertisement

Tiruchendur Nadar Street Chandanamari Amman Temple Donation Ceremony!!

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா!!

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கொடை விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

சந்தனமாரி அம்மன் கோவில்

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தனமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு ஜெய விநாயகருக்கும், சந்தனமாரி அம்மனுக்கும் மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய விநாயகருக்கும், சந்தனமாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி தீபாரானை நடந்தது.

பால்குடம் ஊர்வலம்

கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9.30 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இந்த பக்தர்கள் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு முளைப்பாரி வீதி உலா நடந்தது. இரவு 12 மணிக்கு சந்தனமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்கு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கொடை விழாவில், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, கவுன்சிலர் தினேஷ் கிருஷ்ணா, வக்கீல் சந்திரசேகரன், திருச்செந்தூர் தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், திருச்செந்தூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து, அ.தி.மு.க. நகர துணை செயலாளர் செல்வ சண்முக சுந்தர், திருச்செந்தூர் நாடார் தெரு இளைஞரணி தலைவர் சந்திரசேகர ஆதித்தன், தொழிலதிபர்கள் தங்கராஜ் நாடார், சின்னத்துரை அன் கோ முருகன், பி.பி.கார்த்திசன் நாடார், பட்டுராஜன், கே.பூவாசகனி, பி.சசிகலா, எஸ்.முரளி, காஞ்சனா, கே.ராஜரத்தினம், கே.பாலகிருஷ்ணன், கே.பாலசுப்பிரமணியன், கே.கார்த்திகேயன், லெட்சுமணன், பாலகுமார், முருகன், எஸ்.வி.ராஜா, சண்முகவேல் நாடார், செங்கல்பட்டு மாவட்ட சமத்து மக்கள் கழக செயலாளர் பழனிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் நீராட்டு

இன்று அதிகாலை 5 மணிக்கு படைப்பு பூஜை தீபாராதனைக்கு பின்னர் அன்னதானம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கும்பம் வீதி உலாவும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாரானை நடக்கிறது.

விழா நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திரைபட மெல்லிசை கச்சேரி, வில்லிசை, கரகாட்டம், இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பாஸ்கர், செயலாளர் நடராஜன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் தனசேகரன், துணை செயலாளர் சுந்தரேசன், கணக்காளர் பிரபு, நிர்வாகம் கமிட்டி உறுப்பினர்கள் செல்வ முருகன், செந்தில் ஆறுமுகம், அமிர்த குண விநாயகம், ராஜேஷ் கண்ணன், கணேசன், சுரேஷ், விக்னேஷ், அஜெய், சுபாஷ் முரளி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST