Thirumal Puja at Kulasekaranpattinam temple on Tuesday

குலசேகரன்பட்டினம் கோவிலில் செவ்வாய்க்கிழமைதிருமால் பூஜை

குலசேகரன்பட்டினம் கோவிலில் செவ்வாய்க்கிழமை திருமால் பூஜை நடக்கிறது. தூத்துக்குடி குலசேகரன்பட்டினம்: குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை ரத்தினமாகாளி அம்மன் கோவிலில் திருமால் பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் மாலை 6 மணிக்கு அம்மன் குடி அழைப்பு, இரவு 10 மணிக்கு அம்மனுக்கு திருமால் பூஜையும், அலங்காரப் படைப்புத் தீபாராதனையும் நடக்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

1,008 Balkuta procession to Adiparashakti temple

ஆதிபராசக்தி கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

நாமக்கல்லில் மேல்மருத்துவத்தூா் ஆதிபராசக்தி அம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் ராமாபுரம்புதூரில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் உலக நன்மைக்காகவும், மத நல்லிணக்கம் வேண்டியும் ஆதிபராசக்தி அம்மனுக்கு 1,008 பாலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நாமக்கல் ஜோதி திரையரங்க வளாகத்தில் இருந்து ராமாபுரம்புதூா் வரையில் ஏராளமான பெண்கள் பால்குடம், கஞ்சி களையங்களை சுமந்தபடி ஊா்வலமாக வந்தனா்.

அதன்பிறகு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கட்டது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டு மன்றக் குழுவினா் செய்திருந்தனா்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Kaliyamman temple dance festival

காளியம்மன் கோவில் ஆடித் திருவிழா

விருதுநகர் அருகே வில்லிபத்திரி காளியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும், விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Kaliyamman Temple Pongal Festival!!

காளியம்மன் கோவில் பொங்கல் விழா!!

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த 30-ந்தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாரதனையுடன் தொடங்கியது.

இரவு 7 மணிக்கு அங்கையர்கண்ணியின் அருள் என்ற தலைப்பில் தேவி பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

2-ம் நாள் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சர்வம் சக்திமயம் என்ற தலைப்பில் சித்ரா கணபதியின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

நேற்று முன்தினம் 3-ம் நாள் காலை 9 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி நகர்வலம் வந்தனர். மாலை 6 மணிக்கு 21 அக்னிக்கட்டி நகர்வலமும், இரவு 7 மணிக்கு மேல் காளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் வீற்றிருந்து, தங்க குடம், வாளி கையில் ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம், துணை தலைவர் எம். செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி. ஆர். சுரேஷ் குமார், கோவில் தர்மகர்த்த எஸ். எம். மாரியப்பன், செயலாளர் மாணிக்கம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Hanuman temples that give grace!!

அருள் தரும் அனுமன் ஆலயங்கள்!!

ராமாயணத்தில் எண்ணற்ற நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ராமபிரான், சீதைக்கு அடுத்தபடியாக பக்தர்களால் வணங்கப்படும் கடவுளாக இருப்பவர், அனுமன் மட்டுமே. அவரை சிவபெருமானின் வடிவமாக புராணங்கள் சொல்கின்றன. சீதாதேவியால், சிரஞ்சீவியாக வாழும் வரத்தைப் பெற்ற அனுமன், இந்த பூலோகத்திலேயே அருவமாக இருந்து ராமநாமம் சொல்லும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக நம்பப்படுகிறது. இவருக்கு இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களை ப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சங்கட் மோட்சன்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அசி நதிக்கரையில் அமைந்துள்ளது, 'சங்கட் மோட்சன் அனுமன்' கோவில். 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த , புகழ்பெற்ற இந்து மதபோதகரும், கவிஞருமான ஸ்ரீ கோஸ்வாமி துளசிதாஸ் என்பரால் இந்த ஆலயம் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. 'சங்கட் மோட்சன்' என்றால் 'தொல்லைகளை நீக்குபவர்' என்று பொருள். ராமபிரானின் மீது அசையாத பக்தியைக் கொண்ட அனுமன், இந்த ஆலயத்தில் உள்ள ராமபிரானை நோக்கி வீற்றிருக்கிறார்.

பாண்டவர்கள் எழுப்பிய கோவில்

இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில் கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில் இருக்கிறது, பால அனுமன் கோவில். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலை நகராக விளங்கியது, இந்திரபிரஸ்தம். கிருஷ்ணனின் உத்தரவின் பேரில், இந்திரன் மூலமாக அனுப்பப்பட்ட மயன், இந்த நகரத்தை பாண்டவர்களுக்காக எழுப்பியதாக மகாபாரதம் சொல்கிறது. யமுனை ஆற்றின் கரையில் அமைந்த இந்திரபிரஸ்தத்தில் பாண்டவர்கள் உருவாக்கிய ஐந்து முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள அனுமன் சிலை , 'ஸ்ரீ அனுமன் ஜி மகராஜ்' என்று வணங்கப்படுகிறது, அதாவது, 'பெரிய அனுமன்' என்று பொருள். இந்தக் கோவிலின் கதவு வெள்ளி முலாம் பூசப்பட்டு, அதில் ராமாயணக் கதையின் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவம்

ராஜஸ்தான் மாநிலம் மெகந்திப்பூர் எல்லையில் இருக்கிறது, பாலாஜி அனுமன் கோவில். இங்கு அனுமன், குழந்தைப் பருவத்தில் இருப்பதால் இவரை 'பாலா' என்று அழைக்கிறார்கள். இது இந்தியாவில் அமைந்த மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் நோய்களுக்காகவும், தீய சக்திகளை விரட்டுதல், பில்லி- சூனியம் போன்றவற்றிற்காகவும் வழிபாடு செய்கிறார்கள்.

கின்னஸ் சாதனை

குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரன்மாய் ஏரியின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது, பால அனுமன் கோவில். இந்த ஆலயம் சாதனை ஒன்றிற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த ஆலயத்தில், 1964-ம் ஆண்டு முதல் 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' என்ற மந்திரத்தை , 24 மணி நேரமும் உச்சரிக்கிறார்கள். இடை விடாத மந்திர உச்சரிப்பின் காரணமாகத்தான், இந்த ஆலயம் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஜாம்நகரில் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

ஆன்மிக கண்காட்சி

ராஜஸ்தான் மாநிலம் சலசர் என்ற இடத்தில் பாலாஜி அனுமன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்திலும் அனுமன், குழந்தைப் பருவ கோலத்தில்தான் காட்சி தருகிறார். இவருக்கு வித்தியாசமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் சலசர் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மற்றும் அஷ்வின் ஆகிய மாதங்களில் இந்த ஆலயத்தில் ஆன்மிகம் சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் இருந்து பல அமைப்புகள் வருகின்றன.

மிகப்பெரிய ஆலயம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராம்காட் என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, சித்ராகூட். இங்கு மரங்கள் நிறைந்த மலைகளுக்குள் அமைந்திருக்கிறது, அனுமன் தாரா என்ற ஆலயம். இது அனுமனுக்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அனுமன் சிலையின் மேல் பாய்ந்தோடும் நீரோடையின் காரணமாக, 'அனுமன் தாரா' என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள அனுமன் சிலை , சிவப்பு நிறக் கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் ஈர்க்கப்படும் பகுதியாக இருக்கிறது.

உறங்கும் அனுமன்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அலகாபாத் கோட்டை அருகே அமைந்திருக்கிறது, 'படே அனுமன்' என்று அழைக்கப்படும், 'லெ தே அனுமன் கோவில்'. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் புனிதத்துவம் வாய்ந்த இடமாகவும் இந்த ஆலயம் இருக்கும் பகுதி சொல்லப்படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த ஆலய அனுமன், உறங்கும் நிலையில் காணப்படுகிறார். இவ்வாலய அனுமன் சயன கோலத்தில் உறங்கிக் கொண்டிருப்பதால் இவரை 'லெ தே அனுமன்' என்று அழைக்கின்றனர்.

மீசையுடன் அனுமன்

குஜராத் மாநிலம் சலங்பூர் என்ற இடத்தில் 'காஸ்த்பஞ்சன் அனுமன் மந்திர்' என்ற பெயரில் அனுமன் கோவில் உள்ளது. இந்த அனுமனுக்கு 'துக்கங்களை அழிப்பவர்' என்று பொருள். இந்த ஆஞ்சநேயர் எங்கும் இல்லாத தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படுகிறார். அதாவது மீசையுடன் பற்களை கடித்தபடி, தன் காலடியின் கீழ் ஒரு பெண் அரக்கியை நசுக்கிய நிலையில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும், பழங்களை கையில் வைத்திருக்கும் வானர உதவியாளர்கள் இருப்பதுபபோல் இருக்கிறது. இவர் பக்தர்களின் துன்பங்களை அகற்றுபவராக அறியப்படுகிறார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Adipapurnami that removes evil...!

தோஷங்கள் போக்கும் ஆடிப்பவுர்ணமி...!

தமிழ் மாதங்களில் இறை வழிபாட்டிற்குரிய மாதங்களாக ஆடி, புரட்டாசி, மார்கழி போன்றவை இருக்கின்றன. இந்த மூன்று மாதங்களிலும் இறைவழிபாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த மாதங்களில் சுபகாரியங்கள் நிகழ்த்துவதை தவிர்ப்பார்கள். புரட்டாசி மாதம் பெருமாளுக்குரியதாகவும், மார்கழி மாதம், பெருமாள் மற்றும் சிவபெருமானுக்குரியதாகவும் இருக்கும் நிலையிலும், ஆடி மாதம் முழுவதும் பெண் தெய்வமான அம்பிகையை வழிபாடு செய்யும் மாதமாக போற்றப்படுகிறது.

இந்த ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிப் பவுர்ணமி என்று அம்பிகையை மாதம் முழுவதும் வழிபட்டபடியே இருப்பார்கள். அப்படி அம்மனை வழிபாடு செய்யும் ஆடி மாத நாட்களில் சிறப்பான ஒரு தினம்தான், ஆடிப் பவுர்ணமி. இந்த முழு நிலவு நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கையில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராட வேண்டும். பின்னர் சாப்பிடாமல், தண்ணீர், பால், பழம் கூட அருந்தாமல், வீட்டின் பூஜை அறையில் இருக்கும் அம்மன் படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது அம்மனுக்கு நைவேத்தியமாக சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை படைப்பது நல்லது. வீட்டில் பூஜையை முடித்த பின்னர், அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றும் அம்மனை கண் குளிர தரிசித்து வழிபட வேண்டும்.

அதோடு அம்மனுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் புதிய ஆடைகளை வழங்கலாம். சிவப்புக் கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பலவகையான வாசம் மிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அருகம்புல்லாலும் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பானது. மேலும் ஆடிப்பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களைக் கொடுக்கும். மேற்படி பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றையும் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

அம்மனை மேற்கூறிய வழியில் வழிபடுபவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய் நொடிகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். விபத்துக்கள், துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இந்த ஆடிப் பவுர்ணமி தினத்தில் ஏழை எளியவர்களுக்கு, புது வஸ்திரம் மற்றும் உங்களால் முடிந்ததை தானமாக வழங்குவது, அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாகும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது

பகல் 1 மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.

இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது.

தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி;

சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் கரகம் புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, சிதம்பரம் ரோடு வழியாக கோவிலை அடைந்தனர். மதியம் அம்பாளுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா். இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மஞ்சள் விளையாட்டு விழாவும், நாளை( ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி உற்சவமும், 24-ந் தேதி(திங்கட்கிழமை) ஊஞ்சல் விழாவும் நடக்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஆறுமுகநேரி வள்ளி வாய்க்கால் சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேகம்

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி வள்ளி வாய்க்கால் சுடலை மாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

ஆறுமுகநேரி வள்ளிவாய்க்கால் சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், தீபாராதனையும் கோ பூஜை, கஜ பூஜை, சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஆறுமுகநேரி சிவன் கோவிலில் இருந்து மேல தாளத்துடன் யானை மேல் புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து முதலாம் கால யாகசாலை பூஜைகள், இரண்டாம் கால இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.

தேவார திருமுறை பாராயணம், மூன்றாம் காலையாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணி அளவில் மூலஸ்தான விமானம், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீப ஆராதனை நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் கோவில் கமிட்டி தலைவர் ஆர். ராஜரத்தினம் நாடார், இணை தலைவர் எஸ்.காளிமுத்து நாடார், செயலாளர் எஸ்.சேகர் நாடார், பொருளாளர் தனசேகர் நாடார், உதவி பொருளாளர் ஏ.வெள்ளத்துரை நாடார் திருப்பணி கமிட்டியாளர்கள் தங்கராஜ் நாடார், தங்கத் துரை நாடார், கோபால் நாடார், காமராஜர் நாடார், எஸ்.ஏ.பி.டி. எல்.அருண்குமார் நாடார், கேசவ பெருமாள் நாடார், கன்னிராஜபுரம் முருகேசன் நாடார், பி.எம்.முருகேசன் நாடார், ஏ.வேல் பாண்டி நாடார் மதுரை ராஜாராம்நாத் நாடார் மற்றும் ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜெ.பாலகுமரேசன் நாடார் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!!

திருமயம் கடியாபட்டி அருகே ஊனையூரில் செந்தாமரைக் கண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள செந்தாமரைக்கண்ணன் பெருமாள் வெங்கடாசலபதி தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலில் திருப்பணிகள் கடியாபட்டி விஸ்வநாதபுரம் மல்லுபட்டி வகையறா நா.லெ குடும்பத்தார்களால் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முன்னதாக 3-ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 1, 2, 3, 4 என நான்கு கால பூைஜ நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் புனிதநீர் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செந்தாமரைக்கண்ணன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான நகரத்தார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 67 )   NEXT |  LAST