Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
என்ன திட்டாதீங்க எப்போவ் - நட்ராஜ் ட்விட்

கர்ணன்’ படத்தில் மிரட்டலான நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள் அதேசமயம், ‘கர்ணன்’ படத்தில் வில்லனாக நடித்ததற்காக திட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன என்பதை நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பதிவில், “என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்.. போன், மெசேஜ்ல திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி” என்று அன்புடனும் நெகிழ்ச்சியுடனும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
விக்ரமின் கோப்ரா திரைப்படம் OTT நேரடி ரிலீஸா?

சியான்’ விக்ரம் நடிப்பில் பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் ‘கோப்ரா’ திரைப்படம் மே மாத வாக்கில் திரைக்கு வரலாம் என்று முதலில் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் வரை ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று சொல்லப்படுகிறது.இப்படியான சூழலில் கோப்ரா, நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் உலவி வருகிறது.

விக்ரமின் கோப்ரா திரைப்படம் OTT இல் வெளியிடப்படவில்லை, என்று தயாரிப்பு நிறுவனம் திரையரங்குகளில் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது

இப்படத்தை ‘டிமான்டி காலனி’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான், முதல் முறையாக ‘கோப்ரா’ மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நடிகை பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் கிளிக்

தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது மற்றுமொரு அழகான புகைப்படத்தை வெளியீட்டியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தளபதிவிஜய்65 Update

தளபதி விஜய் சன்பிக்சஸ் தயாரிப்பில் நடிக்கும் தளபதி65 படபிடிப்பில் கலந்து கொள்ள நேற்று ஜார்ஜியா சென்றார். இன்று படபிடிப்பில் தளபதி விஜய் கலந்து புகைபடத்தை சன்பிக்சஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தனுஷ்க்கு சின்ன கலைவாணர் வாழ்த்து

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! கர்னண் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரஹ்மான் ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ரஹ்மான் 99 சாங்ஸ் என்ற படத்தின் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்திருக்கிறார் அல்லவா. அப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். 99 சாங்ஸ் படப்பாடல்களில் உங்களுக்கு எந்தப் பாடல் பிடிக்குமோ அதனை பாடி ஒலிப்பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியாகவும் இருக்கலாம். பாடலை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். ரஹ்மானையும் (@arrahman) நீங்கள் டேக் செய்ய வேண்டும்.

இந்தப் போட்டியில் பத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ரஹ்மான் மற்றும் 99 சாங்ஸ் படக்குழுவுடன் காணொலியில் உரையாட வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் தொழில்முறை பாடகராகதான் இருக்க வேண்டும் என்பதில்லை. பாத்ரூம் பாடகராக இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ரஹ்மானுடன் உரையாடலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
முடிசூடா ராணி நடிகை சசிகலா திடீர் மரணம்

பாலிவுட் மூத்த நடிகை சசிகலா மரணமடைந்தார். அவருக்கு வயது 88. பாலிவுட்டில் திரையுலகில் 70களில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் நடிகை சசிகலா.

பாலிவுட்டில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஜவால்கர். இவர் ஹம்ஜோலி, சர்ஹம், சோரி சோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாமல், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த நடிகை சசிகலா கடந்த 2007ம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை நடிகை சசிகலாவின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கிளுகிளிப்பை ஏற்படுத்திய ரோஜா சீரியல் பிரியங்கா டாட்டூ

பிரியங்கா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் டாட்டூ குத்திய புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் அவர் என்ன டாட்டூ குத்தியுள்ளார் என்பதை விவாத பொருளாக ஆகிவிட்டனர் அந்த அளவிற்கு கிளுகிளிப்பை ஏற்படுத்திய ரோஜா சீரியல் பிரியங்காவின் டாட்டூ

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே அடுத்த முதல்வர் - கனிமொழி எம்பி

தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால், நிச்சயமாக திமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதியானது.

எல்லா விதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இல்லை. கொரோனா தொற்று காலக்கட்டங்களில் அரசாங்கம் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. அடிப்படை தேவைகள் எதையும் இந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு செய்து கொடுக்கவில்லை. அதனால், எல்லாருடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் மும்பைக்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கண்டிப்பாக மாநகரம் படத்தை போலவே ஹிந்தியில் மும்பைக்கார் படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைக்கார் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 412 of 413 )   NEXT |  LAST