>>
இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க தேசிய உதவி எண் அறிவிப்பு

இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க 155260 என்ற தேசிய உதவி எண்ணையும், புகார் தளத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது.

இணைய மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், இதில் புகார் அளிப்பதன் மூலம் தனது பணம் பறிபோகாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும். இதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயக்கி வருகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த உதவி எண் செயல்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
டெல்லி, ஹைதராபாத் மற்றும் குஜராத்தில் 5ஜி சோதனைகளுக்கு ஜியோ விண்ணப்பம்

ஜியோ! இந்திய கருவிகளைப் பயன்படுத்தி மும்பையில் 5 ஜி சோதனைகளைத் தொடங்கியுள்ளது. டெல்லி, ஹைதராபாத் மற்றும் குஜராத்தில் 5 ஜி சோதனைகளுக்கு ஜியோ விண்ணப்பித்துள்ளது. மேலும் தொலைதொடர்பு நிறுவனமான நோக்கியா, சாம்சங் மற்றும் எரிக்சன் ஆகியவற்றுடன் மற்ற நகரங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
5ஜி நெட்வொர்க் சோதனையால் தான் இறப்புகள் - காட்டுத்தீ போல வதந்தி

ஹரியானா அரசுக்கு இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில், “5ஜி நெட்வொர்க் சோதனையால்தான் உயிரிழப்புகளும், நோய்களும் ஏற்படுகின்றன என சிலர் வதந்திகளை பரப்பிவிட்டுள்ளனர்.இந்தியாவில் 5ஜி சோதனை இன்னும் தொடங்காத நிலையில் இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன. 5ஜி சோதனைக்கு அரசு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சோதனை நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5ஜி தொடர்பான வதந்திகளை விவசாய சங்கங்களும் நம்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹரியானாவில் வதந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Whatsapp புதிய பிரைவசி நெறிமுறைகளை பயனாளிகள் வரும் 15 ம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

புதிய பிரைவசி நெறிமுறைகளை பயனாளிகள் வரும் 15 ம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்திருந்த நிபந்தனையை வாட்ஸ்அப் தள்ளிவைத்துள்ளது. புதிய நெறிமுறைகளை ஏற்காவிட்டாலும், பயனாளிகள் கணக்கு டெலிட் செய்யப்படாது என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், வாட்ஸ்அப் தனது பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்ததும், அதனால் பெரும் சர்ச்சை உண்டானதும் நினைவில் இருக்கலாம். பயனாளிகளின் தரவுகள் சேகரிக்கப்படும் விதம், அந்த தகவல்கள் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் அம்சம் உள்ளிட்ட பல விஷயங்களை கொண்டிருந்த இந்த பிரைவசி கொள்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்கவிட்டால் வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என கெடு விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பப்ஜி விளையாட்டு அறிமுகம்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு, பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளாதாக தகவல்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை பறக்க விட்டது நாசா சாதனை

செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
WhatsApp-ல் பரவும் வைரஸ்

வாட்ஸ் அப் குழுக்களில் “பிங்க் வாட்ஸ்அப்”என்ற நில ஆபத்தான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. பிங்க் லுக் வாட்ஸ்அப் என்று வரும் லிங்கை தொடவோ, திறக்கவோ, பார்வர்ட் செய்யவும் வேண்டாம். இதனால் பயனாளிகளின் வங்கிக் கணக்கு, பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து டவுன்லோட் செய்த ஆப்களை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 28 of 28 )   NEXT | LAST