>>
விண்வெளிக்கு சாதனை பயணம் புறப்பட்டார் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் ஜெப் பெசோஸ்

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின்என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் புளூ ஆரிஜின் நிறுவன தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தின் முதலாவது பயணத்தில், ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு புறப்பட்டார். ஜெஃப் பெசோசுடன் 82 வயது முதியவரும், 18 வயது மாணவரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். நியூ ஷெப்பர்டு விண்கலம் மூலம் தனது குழுவினருடன் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு புறப்பட்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா வைரசுடன் வாழ பிரிட்டன் மக்கள் பழகிக் கொள்ளுங்கள் - பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் வரும் 19 ஆம் தேதியில் இருந்து தளர்வுகளை அளிப்பது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ள நேரத்தில் கொரோனா வைரசுடன் வாழ பிரிட்டன் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரிட்டனில் வரும் 21 ஆம் தேதி முதல் தளர்வுகளை முழுமையாக அறிவிக்க அவர் முன்னதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்டா மரபணு மாற்ற வைரசால் அங்கு நோய் பரவல் அதிகரிப்பதை அடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா மூன்றாவது அலையால் இங்கிலாந்து பிரதமர் கவலை

அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது 3வது அலை ஏற்பட்டுள்ளதால் எங்கள் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில் கவலை தெரிவித்துள்ளார்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில் அதிக பலியை சந்தித்த நாடு இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்திப்பு

வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ள இரு எதிரி நாடுகள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஸ்சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் புதன்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் அணு ஆயுதம் குறைப்பு, கரோனா தொற்று பரவல் நிலைகள், உக்ரைன் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு உலக அரசியல் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் மாலுகு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1ரிக்டர் பதிவாகி உள்ளதையடுத்து மாலுகு தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரை ஒட்டிய பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
டிரம்ப்பின் டிக் டாக், வி சாட்டுக்கு தடை உத்தரவுகளை கைவிட்டது - வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: டிக் டாக், வீ சாட் போன்ற சீன செயலிகளுக்கு தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வெள்ளை மாளிகை கைவிட்டுள்ளது.

மாறாக, சீனாவுடன் தொடா்புடையதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் மென்பொருள் செயலிகளை அடையாளம் காண தற்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசு தனது பாணியிலான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

கடந்த ஆண்டு, டிக் டாக் நிறுவனம் அமெரிக்கா தொடா்பான தகவல்களை அதன் பயனாளா்களிடம் இருந்து பெறுவதாகக் கூறி அப்போது அதிபராக இருந்த டிரம்ப், டிக் டாக் செயலியை கட்டுப்படுத்தும் பல உத்தரவுகளை பிறப்பித்தாா். எனினும் அந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படும் முன் நீதிமன்றம் அந்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
37 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் கோஷியாமி தமாரா சித்தோல் (37). பிரசவ வலி காரணமாக பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 10 குழந்தைகள் பிறந்தன. 7 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. 10 குழந்தைகள் பிறந்திருப்பதை கண்டு கோஷியாமியே திகைத்துள்ளார். ஏனென்றால், மருத்துவ பரிசோதனைகளின் போது 6 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் 10 குழந்தைகள் பிறந்துள்ளதை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தார். இவருக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 குழந்தைகள் பெற்றது கின்னஸ் சாதனையாகி உள்ளது. இதற்கு முன் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றெடுத்தது உலக சாதனையாக இருந்தது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு 2வது குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு வெள்ளிக்கிழமை ஆரோக்கியமான 2வது குழந்தை பெண் குழந்தை பிறந்ததாகவும், லிலிபெட் “லில்லி” டயானா மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என்று பெயர் சூட்டியிருப்பதாகவும், அவர்களது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

ஹாரி தம்பதியினர் அரசப் பதவியை விட்டு விலகி, அரச கடமைகளை துறந்து வட அமெரிக்காவில் தனித்து வாழ்ந்து வருகிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி 39 வயதான இளவரசி கேட் மிடில்டன், நேற்று லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் வைத்து முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தடுப்பூசி செலுத்தும் பணியில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிராணிகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தை செலுத்தத் தொடங்கியுள்ள ரஷ்யா

பிராணிகளுக்கு செலுத்தக் கூடிய கோவிட் தடுப்பு மருந்தை உலகில் முதல் நாடாக , ரஷ்யா கண்டுபிடித்து அதற்காக பதிவும் செய்திருக்கிறது.தற்போது அந்நாட்டில் சில மாவட்டங்களில், கால்நடை மருத்துவமனைகளில் , பிராணிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

பிராணிகளுக்காக பிரத்தியேகமாக ரஷ்யா தயாரித்திருக்கும் , Carnivak – Cov தடுப்பு மருந்தை வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள், அர்ஜெண்டினா, தென்கொரியா , ஜப்பான் முதலிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.

இதற்கிடையில், கோவிட்-19 வைரஸ் –சை பரவச் செய்வதில், பிராணிகளும் காரணமாக இருப்பதாக இதுவரை அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லை. எனினும், பிராணிகளை நேசிப்பவர்கள் விரைந்து தங்களது செல்லப் பிராணிகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தைச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 51 of 52 )   NEXT |  LAST