>>
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய முக ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சிசெய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அழகு தேவதை சமந்தா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் பயோடேட்டா

சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அதிகமாக நடித்து முன்னணி நடிகை ஆவார், மேலும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் வென்றுள்ளார். வணிகவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மாடலிங் ஆர்வம் கொண்ட அவர் பார்ட் டைம் ஆக மாடலிங் செய்து வந்து உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன. அதிகமாக சம்பளம் பெரும் நடிகைகளில் முன்னணியில் உள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது. திருமணம் ஆன பின்பும் நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அழகு தேவதை சமந்தா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி

அறத்தையும், அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். கே.எஸ்.அழகிரி, ( தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி): மகாவீரர், பிறந்தநாளில் அவரின் போதனைகளை பின்பற்றி தமிழகத்தில் வாழும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 14 of 14 )   NEXT | LAST