தடுப்பூசி போட்டுக்கொண்டாள் வாரத்துக்கு ஒரு முறை 5 பயனாளிகளுக்கு தலா ரூ.7 கோடி பரிசு

தடுப்பூசி போட்டுக்கொண்டாள் வாரத்துக்கு ஒரு முறை 5 பயனாளிகளுக்கு தலா ரூ.7 கோடி பரிசு

ஓஹியோ மாகாணத்தில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து ஓஹியோ மாகாண ஆளுநர் மைக் டிவைன் தனது டிவிட்டர் பதிவில், ’தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் வாரத்துக்கு ஒரு முறை 5 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.7 கோடி பரிசாக வழங்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். ‘‘இவ்வாறு பரிசளிப்பது வீண் விரயத்தை ஏற்படுத்தலாம் என சிலர் நினைக்ககூடும், ஆனால் தடுப்பூசி இருக்கும் போது அதனை பயன்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையான விரயமாகும். உயிரிழப்புகளை தடுக்கவே இந்த சலுகையை அறிவித்துள்ளேன்’’ என்றும் டிவைன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்