Advertisement
உங்கள் வீடு தேடி வருவேன் - கமல்ஹாசன் டிவிட் ?

கோவை தெற்குத் தொகுதி வாக்காளர்களே,  உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணமோ அல்லது பரிசுகளோ கொடுக்க யாராவது வந்தால் அவர்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துங்கள். என்னையும் அதில் Tag செய்யுங்கள். நேர்மைக்குத் தலை வணங்க உங்கள் வீடு தேடி வருவேன்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
எடப்பாடி மக்களிடம் - முதலமைச்சர் வேண்டுகோள்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வனவாசி என்ற இடத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஜெயலலிதா இல்லாத நிலையில், தன்னை முதலமைச்சராக முன்னிறுத்தும் தேர்தல் என்பதால் எடப்பாடியில் இருக்கும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் தனது வெற்றி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே அடுத்த முதல்வர் - கனிமொழி எம்பி

தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால், நிச்சயமாக திமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதியானது.

எல்லா விதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இல்லை. கொரோனா தொற்று காலக்கட்டங்களில் அரசாங்கம் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. அடிப்படை தேவைகள் எதையும் இந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு செய்து கொடுக்கவில்லை. அதனால், எல்லாருடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அதிமுகவினர் விடியவிடிய பணப்பட்டுவாடா

அணைத்து கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோல்வி பயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்து அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக பணம் விநியோகிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதை அதிகாரிகளும் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் பெயரளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுக்கு ரூ.2,000 வரை தருவதற்காக மற்ற கட்சினர் குற்றம் சாட்டுகின்றன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் மும்பைக்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கண்டிப்பாக மாநகரம் படத்தை போலவே ஹிந்தியில் மும்பைக்கார் படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைக்கார் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதனால் மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் மும்பையில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த முடியும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒருவேளை, மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ஹைதராபாத், இந்தூர் ஆகிய இரு நகரங்களும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த தயாராக உள்ளதாகவும் அறியப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஆ.ராசா, தயாநிதி, லியோனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, திமுக எம்.பி. தயாநிதி மாறன், பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக பெண்கள் வழக்குரைஞா் பிரிவு கடந்த 29ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்ஆபாசமாக திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரஜினிக்கு கமல் வாழ்த்து

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரங்கராஜ் பாண்டே வாழ்த்துக்கள்

அத்தனை பொறாமைகளையும் பொறுத்துக் கொள்ளும் தன்மை... அவர் நாண செய்யும் நன்னயம்... அது தான் #என்_அண்ணன்.
அதற்குத் தான் தாதாசாகேப் பால்கே விருது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 6133 of 6133 )   NEXT | LAST