Advertisement
கிளுகிளிப்பை ஏற்படுத்திய ரோஜா சீரியல் பிரியங்கா டாட்டூ

பிரியங்கா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் டாட்டூ குத்திய புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் அவர் என்ன டாட்டூ குத்தியுள்ளார் என்பதை விவாத பொருளாக ஆகிவிட்டனர் அந்த அளவிற்கு கிளுகிளிப்பை ஏற்படுத்திய ரோஜா சீரியல் பிரியங்காவின் டாட்டூ

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா பாதிப்பு விவரம் இதோ 04 ஞாயிறு ஏப்ரல் 2021

தமிழகத்தில் இன்று 3,581 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,99,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,778 பேர் உயிர் இழந்து 8,65,071 பேர் குணம் அடைந்து தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,53,760 பேர் பாதிக்கப்பட்டு 4,268 பேர் உயிர் இழந்து 2,41,246 பேர் குணம் அடைந்து தற்போது 8,246 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகம், புதுச்சேரியில் பிரச்சாரம் ஓய்ந்தது

பிரச்சாரம் ஓய்ந்தது - நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது. தேர்தல் விவகாரத்தை, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அசத்தும் ஊபர் நிறுவனம் - வாக்குச்சாவடிகளுக்கு செல்ல இலவச கார் சேவை

தபால் வாக்கு அளிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல ஊபர் நிறுவனம் இலவச வாகன சேவை வழங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மட்டும் இந்த சேவை கிடைக்கும் என்றும் இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ. தூரத்திற்குட்பட்டு இருப்பின் பயண கட்டணம் 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும் என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்

ஏப்ரல் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

அதேபோல ஏப்ரல் 5 முதல் 7 ஆம் தேதி வரை கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக ஏப்ரல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழ்நாட்டில் இதுவரை 412 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 412 கோடி ரூபாய் அளவிற்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பணம், பொருள்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுவந்தன.

இந்நிலையில், பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ‘கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வரை, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் 815 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், இலவசப் பொருட்கள், மது பானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
'தோனியாக இருக்க விரும்பவில்லை.. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்'- சஞ்சு சாம்சன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2021-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் புள்ளிப்பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட ராஜஸ்தான் அணியை சஞ்சு சாம்சான் மீட்பார் என அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் கேப்டன்சியில் தோனி போல் செயல்பட மாட்டேன் என கூறியுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகம் - புதுச்சேரியில் ஓய்கிறது தேர்தல் பிரச்சாம்

இன்று மாலையுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரச்சாரம் ஓய்கிறது. மாலை 7 மணிக்குப் பிறகு, திரையரங்கு, தொலைக்காட்சி, வேறு எந்த மின்னணு ஊடகம் மூலம் பிரசாரங்கள் கூடாது என்றும், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா

இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கோவிந்தா "உடல் நிலையில் சில மாற்றம் இருந்ததால் நானாகவே முன் வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ உதவிகளுடன் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஊடகங்களை மிரட்டுவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை - முத்தரசன்

திமுகவிற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியிடக்கூடாது என முதலமைச்சர் அமைச்சர் மற்றும் உள் துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஊடகங்களை மிரட்டுவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும் என திருத்துறைப்பூண்டி மில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 6132 of 6133 )   NEXT |  LAST