Advertisement
முடிசூடா ராணி நடிகை சசிகலா திடீர் மரணம்

பாலிவுட் மூத்த நடிகை சசிகலா மரணமடைந்தார். அவருக்கு வயது 88. பாலிவுட்டில் திரையுலகில் 70களில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் நடிகை சசிகலா.

பாலிவுட்டில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஜவால்கர். இவர் ஹம்ஜோலி, சர்ஹம், சோரி சோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாமல், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த நடிகை சசிகலா கடந்த 2007ம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை நடிகை சசிகலாவின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வாக்காளர்கள் பட்டியலில் சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது! தொண்டர்கள் அதிர்ச்சி!

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்று சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. இவர், தண்டனை காலம் முடிவடைந்து சமீபத்தில் விடுதலையானார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை (ஏப்.,6) நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தின் முகவரியில் சசிகலாவின் பெயர் பதிவாகி இருந்தது. போயஸ் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதால், அந்த முகவரியில் இருந்த அனைவரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். தி.நகர் முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சசிகலா விண்ணப்பிக்கவில்லை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வோட்டர் ID இல்லதவர்கள் இந்த 12 ID இருந்தால் போதும்

வாக்காளர் ஐடி தவிர, இவை 12 ஐடி கார்டுகள் வைத்து வாக்களிக்கலாம்

1 பாஸ்போர்ட்

2 பேன்கார்ட்

3 ஆதார் கார்ட்

4 டிரைவிங் லைசன்ஸ்

5 MNREGA வேலை அட்டை

6 ஓய்வூதிய ஆவணத்தை புகைப்படம் எடுத்தது

7 இதனைத் தவிர, தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள தபால் அலுவலகப் புத்தகம்

8 RGI மற்றும் NPR ஆல் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

9 தொழில் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு அட்டை

10 தேர்தல் முறையால் வெளியிடப்பட்ட உண்மையான புகைப்பட வாக்காளர் சீட்டு

11 எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது

12 மாநில பொதுமக்கள் லிமிடெட் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட்ட பொதுத்துறை அடையாள அட்டை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தேர்தலுக்கு பின் ஊரடங்கா? சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சற்று முன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ’தமிழ்நாட்டில் கொரனோ பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றும், ஏப்ரல் ஏழாம் தேதிக்கு பின் கொரோனா நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தேர்தலுக்குப்பின் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சென்னையில் 30 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

தேர்தல் நாள் அன்று பாதுகாப்பிற்காக மாநகர காவல் துறை சார்பில் 23,500 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர 18 துணை ராணுவத்தினர். 10 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 3 ஆயிரம் சென்னை ஊர்காவல் படையினர், 1,500 கர்நாடகா மாநில ஊர்காலவர் படையினர், 700 ஓய்வு பெற்ற காவல் துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வாக்கு பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் யாரும் பிரசாரம் செய்ய கூடாது. அரசியல் கட்சிகள் 200 மீட்டர் தொலைவிற்கு யாரும் பூத்துக்கள் அமைக்க கூடாது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் - தளபதி சர்காதி உள்பட 82 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பு துணை அதிகாரி பபத் அமன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த வான்வழி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சர்காதி உள்பட 82 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, பயங்கரவாதிகளின் 2 பீரங்கிகள் மற்றும் வாகனங்கள் பலவற்றையும் வீரர்கள் தாக்கி அழித்தனர்.

தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். எனினும், இந்த வான்வழி தாக்குதல்கள் பற்றி தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் எதுவும் கூறவில்லை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மு.க.ஸ்டாலின் 20 நாட்களில் 12 ஆயிரம் கி.மீட்டர் தூரம் சூறாவளி பிரச்சாரம்

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி இன்று கொளத்தூரில் பிரச்சாரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார். கடந்த 20 நாட்களாகத் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அதிர்ச்சியில் IPL2021 வெறியர்கள்

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பிசிசிஐ எடுத்து வருகிறது.

பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது. வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை

3 நாட்கள் டாஸ்மாக் கடைமுறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்றும் முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனாவில் இருந்து மீண்டார் நல்லகண்ணு! தொண்டர்கள் மகிழ்ச்சி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கடந்த 30 ஆம் தேதி 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொரோனாவிலிருந்து மீண்டார். மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 6131 of 6133 )   NEXT |  LAST