கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகள் அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகள் அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான கீழ்கண்ட வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய காத்திருக்க வைப்பதை தவிர்க்க கூடுதல் தகன மேடைகளை உருவாக்கலாம்.

2. இடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா நோயாளிகளின் உடல்களை கையாள விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

3. சடலங்களை தொடாமல் இறுதிச்சடங்களை நடத்த அனுமதிக்கலாம் என்றும், மத நூல்களை வாசிக்கவும், புனித நீரை சடலம் மீதும் தெளிக்கவும் அனுமதிக்கலாம்.

4. இறந்தவர்களின் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்ய இயலாத போது, மத அம்சங்களை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை மேற்கொள்ளலாம்.

5.மின் மயானங்களை அதிகரிக்க வேண்டும்.

6. இறந்தவர்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் மொத்தமாக உடல்களை எரிக்க கூடாது.

7.இடுகாடு, மின்மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்

8. இறந்தவர்களின் அடையாளம் மற்றும் தகவல்களை சேகரிக்க வேண்டும்.

9.சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

10. இடுகாடு, மின் மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

11. ஊடகங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை நேரடியாக காட்டக்கூடாது என 11 நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்