ஸ்டாலின் அடுத்த அதிரடி நடவடிக்கை தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம்

ஸ்டாலின் அடுத்த அதிரடி நடவடிக்கை தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம்

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆம்புலன்சில் உள்ள வசதிகளைப் பொறுத்து, ஆம்புலன்ஸ்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணமும். ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 50 கட்டணமும் நிர்ணயித்துள்ளது. மேலும் வென்டிலேட்டர் வசதி உள்ள நவீன சிகிச்சை கருவிகள் உள்ள ஆம்புலன்ஸ்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் 4 ஆயிரமும், வென்டிலேட்டர் வசதியுள்ள ஆம்புலன்ஸ்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 100 கட்டணமும் நிர்ணயித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்