முழு ஊரடங்கில்  மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

முழு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் டீ கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில், பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குறைந்த எண்ணிக்கை ஊழியர்களை கொண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இயங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்