>>
டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் கோரிக்கை! டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்?

கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையைச் செயல்படுத்த வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதாரமற்ற டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை எனக் குறைக்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு!

அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சில அறிகுறிகள் இருந்ததையடுத்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்துவிடுவேன் என நம்புகிறேன். விரைவில் மீண்டு வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
காருண்யா கொரோனா தடுப்பு சிகிச்சை மையமாக செயல்படும்- பால் தினகரன்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்துக்கொள்ள டாக்டர் பால் தினகரன் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்காக டாக்டர். பால் தினகரனை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

ஏற்கனவே இந்த மையம் கடந்த ஆண்டு கொரோனா பரவிய போதும் கொரோனா தடுப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் 15-04-2021

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,176 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
புதுச்சேரியில் 45 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது.மாநிலம் முழுவதும் 4,376 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 333, காரைக்காலில் 104, மாகியில் 7, ஏனாமில் 32 என, மொத்தம் 476 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.தற்போது, மருத்துவமனைகளில் 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,416 பேர் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.இந்நிலையில், கொரோனாவில் இருந்து 242 பேர் நேற்று முன்தினம் ஒரே நாளில் மீண்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 41 ஆயிரத்து 719 பேர் குணமடைந்துள்ளனர்.புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருவர் இறந்தனர். இதனால், கொரோனாவில் இறந்தவர் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கர்ப்பிணி பெண் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, இரண்டே நாளில் சுமார் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள சூழலில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், ஒரு பெண் வேலம்மாள் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு தகரம் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான நபர்கள் சென்று வந்த இடங்களை கண்டறிந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார நாட்களில் தடை

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 10.4.2021 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும் / தளர்வுகளும், 11.4.2021 முதல் நடைமுறைப் படுத்தப்படும்.
அ) புதிய கட்டுப்பாடுகள்

i) சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து
அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

ஆ) புதிய தளர்வுகள்

i) அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

ii) இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டினால்! தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த் போதிலும் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்று குறித்து பொதுமக்கள் அலட்சியம் காட்டுவது கவலை தருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடும் பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை.

யாரும் சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில் மீண்டும் தினந்தோறும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை எனில் மறுபடியும் வேறு வழியில்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை : சென்னையில் தீவிர கண்காணிப்பு

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிரிவாகம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழக அரசு அதிரடி இ-பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 60 of 61 )   NEXT |  LAST