>>
ஆட்டோ,திருமண விழா,இறுதி சடங்கு,பேருந்துகளுக்கு கட்டுபாடு - தமிழக அரசு

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி. திருமண விழாவில் அதிகபட்சமாக 100 பேர் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி.மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சில்லரை வியபார கடைகளுக்கு தடை

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியபார கடைகளுக்கு தடை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ,தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்பு.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படாது என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தேர்தலுக்கு பின் ஊரடங்கா? சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சற்று முன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ’தமிழ்நாட்டில் கொரனோ பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றும், ஏப்ரல் ஏழாம் தேதிக்கு பின் கொரோனா நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தேர்தலுக்குப்பின் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா பாதிப்பு விவரம் இதோ 04 ஞாயிறு ஏப்ரல் 2021

தமிழகத்தில் இன்று 3,581 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,99,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,778 பேர் உயிர் இழந்து 8,65,071 பேர் குணம் அடைந்து தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,53,760 பேர் பாதிக்கப்பட்டு 4,268 பேர் உயிர் இழந்து 2,41,246 பேர் குணம் அடைந்து தற்போது 8,246 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா

இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கோவிந்தா "உடல் நிலையில் சில மாற்றம் இருந்ததால் நானாகவே முன் வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ உதவிகளுடன் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 61 of 61 )   NEXT | LAST