சீமான் தந்தை மரணம் - சரத்குமார் இரங்கல்

அருமை நண்பரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான திரு. சீமான் அவர்களின் தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. தந்தையின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சீமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் மறைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தந்தையை இழந்த சீமானுக்கு கட்சியினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த நெல்லை சிவா காலமானார்

நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தவர் நெல்லை சிவா. அவர் 80களில் நடிக்க தொடங்கி தற்போது வரை குணச்சித்திர நடிகராக, காமெடியனாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் நெல்லை சிவா அவர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரபல இயக்குனர் திடீர் மரணம்

64 வயதான டென்னிஸ் ஜோசப், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, கோட்டையத்தில் உள்ள அவரது வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை, அருகாமையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டென்னிஸ் ஜோசப் மலையாள சினிமாவில் மிகவும் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவராகவும், 1980 களில் இருந்து, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இயக்குனர் வெங்கட் பிரபு & நடிகர் பிரேம்ஜியின் தாயார் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்

இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவியும், இயக்குனர் வெங்கட் பிரபு & நடிகர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை அம்மாள் (69) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு11.30 மணியளவில் உயிர் பிரிந்தது ...

ஆழ்ந்த இரங்கல்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிரபல தெலுங்கு நடிகர் டி நரசிம்மராவ் கொரோனாவால் பலி

பிரபல தெலுங்கு நடிகர் டி நரசிம்மராவ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் டி நரசிம்மராவ் சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நரசிம்மராவ் காலமாகியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் காலமானார்

தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலை 6.10 மணியளவில் காலமானார்.

அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் மியா தமிழின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

உடல்நலக்குறைவால் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் சிகிச்சை பலனின்றி காலமானார் அவரிக்கு வயது 91

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 14 of 14 )   NEXT | LAST