வோட்டர் ID இல்லதவர்கள் இந்த 12 ID இருந்தால் போதும்

வாக்காளர் ஐடி தவிர, இவை 12 ஐடி கார்டுகள் வைத்து வாக்களிக்கலாம்

1 பாஸ்போர்ட்

2 பேன்கார்ட்

3 ஆதார் கார்ட்

4 டிரைவிங் லைசன்ஸ்

5 MNREGA வேலை அட்டை

6 ஓய்வூதிய ஆவணத்தை புகைப்படம் எடுத்தது

7 இதனைத் தவிர, தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள தபால் அலுவலகப் புத்தகம்

8 RGI மற்றும் NPR ஆல் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

9 தொழில் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு அட்டை

10 தேர்தல் முறையால் வெளியிடப்பட்ட உண்மையான புகைப்பட வாக்காளர் சீட்டு

11 எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது

12 மாநில பொதுமக்கள் லிமிடெட் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட்ட பொதுத்துறை அடையாள அட்டை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சென்னையில் 30 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

தேர்தல் நாள் அன்று பாதுகாப்பிற்காக மாநகர காவல் துறை சார்பில் 23,500 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர 18 துணை ராணுவத்தினர். 10 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 3 ஆயிரம் சென்னை ஊர்காவல் படையினர், 1,500 கர்நாடகா மாநில ஊர்காலவர் படையினர், 700 ஓய்வு பெற்ற காவல் துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வாக்கு பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் யாரும் பிரசாரம் செய்ய கூடாது. அரசியல் கட்சிகள் 200 மீட்டர் தொலைவிற்கு யாரும் பூத்துக்கள் அமைக்க கூடாது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை

3 நாட்கள் டாஸ்மாக் கடைமுறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்றும் முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகம், புதுச்சேரியில் பிரச்சாரம் ஓய்ந்தது

பிரச்சாரம் ஓய்ந்தது - நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது. தேர்தல் விவகாரத்தை, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அசத்தும் ஊபர் நிறுவனம் - வாக்குச்சாவடிகளுக்கு செல்ல இலவச கார் சேவை

தபால் வாக்கு அளிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல ஊபர் நிறுவனம் இலவச வாகன சேவை வழங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மட்டும் இந்த சேவை கிடைக்கும் என்றும் இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ. தூரத்திற்குட்பட்டு இருப்பின் பயண கட்டணம் 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியுடன் அளிக்கப்படும் என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஊடகங்களை மிரட்டுவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை - முத்தரசன்

திமுகவிற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியிடக்கூடாது என முதலமைச்சர் அமைச்சர் மற்றும் உள் துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஊடகங்களை மிரட்டுவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும் என திருத்துறைப்பூண்டி மில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகத்தில் ஏப்ரல் 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் காரணமாக பொது விடுமுறை என்பதால் ஏப்ரல் 6ம் தேதி வரை அனைத்து தரப்பு பள்ளிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
உங்கள் வீடு தேடி வருவேன் - கமல்ஹாசன் டிவிட் ?

கோவை தெற்குத் தொகுதி வாக்காளர்களே,  உங்கள் வீட்டிற்கு ஓட்டுக்குப் பணமோ அல்லது பரிசுகளோ கொடுக்க யாராவது வந்தால் அவர்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துங்கள். என்னையும் அதில் Tag செய்யுங்கள். நேர்மைக்குத் தலை வணங்க உங்கள் வீடு தேடி வருவேன்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
எடப்பாடி மக்களிடம் - முதலமைச்சர் வேண்டுகோள்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வனவாசி என்ற இடத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஜெயலலிதா இல்லாத நிலையில், தன்னை முதலமைச்சராக முன்னிறுத்தும் தேர்தல் என்பதால் எடப்பாடியில் இருக்கும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் தனது வெற்றி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அதிமுகவினர் விடியவிடிய பணப்பட்டுவாடா

அணைத்து கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோல்வி பயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்து அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக பணம் விநியோகிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதை அதிகாரிகளும் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் பெயரளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுக்கு ரூ.2,000 வரை தருவதற்காக மற்ற கட்சினர் குற்றம் சாட்டுகின்றன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3821 of 3822 )   NEXT |  LAST