Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
கன்னத்தில் அறை விழும் - நடிகர் சித்தார்த் ட்விட்

சாமானியராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் கன்னத்தில் அரை விழுவதை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரிகை விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
'மே 2க்கு பிறகு இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை' - மு.க.ஸ்டாலின்

மே 2-ந் தேதிக்கு பிறகு இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் தமிழக மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே ‘காபந்து சர்க்கார்' இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலை தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் - மத்திய அரசு

பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், சுமார் 80 கோடி பேர் பயனடைவர் என்றும், இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சத்யபிரதா சாகு ஆலோசனை

திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தலைமைச்செயலாளருடன் இன்று மாலை சத்யபிரதா சாகு ஆலோசனை

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை - கமல்ஹாசன்

“மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்.” - கமல்ஹாசன்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை - தமிழக அரசு அதிரடி

கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதாகும் எனவே அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் யாரெல்லாம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அந்த நிறுவனங்கள் “Work from Home” முறையை நடைமுறைப்படுத்தலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மே 2 திமுக ஆட்சி அமைத்தால் சபாநாயகர் இவரா?

திமுக 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என பிரசாந்த் கிஷோர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார். ஸ்டாலினும் பேட்டிகளில் மே 2ஆம் தேதி புதிய அரசு அமையப் போகிறது என்பதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். இச்சூழலில் சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்ற புதிய யோசனைகளும் அறிவாலயத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறதாம்.

அதில் டாப் லிஸ்டில் இருப்பவர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் பெயர் தானாம். 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
டி.டி.வி.தினகரன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

பண்பாடு, கலாச்சாரம், உணவு என எல்லாவற்றிலும் இயற்கையோடு இணைந்த நம்முடைய பழந்தமிழர் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்கு சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது.இந்த புத்தாண்டில் அதற்கான உறுதியினை ஏற்றிடுவோம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)

இப்புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் துயரம் நீங்கிடவும், வாழ்வில் வளமும், நலமும் பெருகிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
யுகாதி திருநாள்: முதல்வர் வாழ்த்து

புத்தாண்டு திருநாளாம் யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக் காத்திடும் அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 103 of 104 )   NEXT |  LAST