>>
சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல்ஹாசன் கண்டனம்

இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தொடர்ந்து உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் சாமானியர்கள்!

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387 விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,100க்கும் விற்பனையாகிறது. ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்த தங்கம் விலை ரூ.35 ஆயிரத்தை எட்டியிருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஸ்டாலின் விசாரணை

தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்' என, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று விசாரணை நடத்தினார்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில், குறைந்த சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதி களில், அதிக சதவீதத்தில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக, சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்திருப்பது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆலோசனை வழங்கிய நிறுவன நிர்வாகிகளிடம், தேர்தல் அன்று, ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.'பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்' என, அந்நிறுவனத்தினர், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஓட்டு சதவீதம் குறைந்தது, தி.மு.க., தலைமைக்கு பல்வேறு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி

பூங்காவில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
மால்கள், பெரிய வணிக வாளகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி.
என்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வாக்காளர்கள் பட்டியலில் சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது! தொண்டர்கள் அதிர்ச்சி!

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்று சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. இவர், தண்டனை காலம் முடிவடைந்து சமீபத்தில் விடுதலையானார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை (ஏப்.,6) நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தின் முகவரியில் சசிகலாவின் பெயர் பதிவாகி இருந்தது. போயஸ் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதால், அந்த முகவரியில் இருந்த அனைவரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். தி.நகர் முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சசிகலா விண்ணப்பிக்கவில்லை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் - தளபதி சர்காதி உள்பட 82 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பு துணை அதிகாரி பபத் அமன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த வான்வழி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சர்காதி உள்பட 82 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, பயங்கரவாதிகளின் 2 பீரங்கிகள் மற்றும் வாகனங்கள் பலவற்றையும் வீரர்கள் தாக்கி அழித்தனர்.

தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். எனினும், இந்த வான்வழி தாக்குதல்கள் பற்றி தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் எதுவும் கூறவில்லை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மு.க.ஸ்டாலின் 20 நாட்களில் 12 ஆயிரம் கி.மீட்டர் தூரம் சூறாவளி பிரச்சாரம்

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி இன்று கொளத்தூரில் பிரச்சாரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார். கடந்த 20 நாட்களாகத் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனாவில் இருந்து மீண்டார் நல்லகண்ணு! தொண்டர்கள் மகிழ்ச்சி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கடந்த 30 ஆம் தேதி 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொரோனாவிலிருந்து மீண்டார். மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழ்நாட்டில் இதுவரை 412 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 412 கோடி ரூபாய் அளவிற்கு பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பணம், பொருள்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுவந்தன.

இந்நிலையில், பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ‘கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வரை, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் 815 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், இலவசப் பொருட்கள், மது பானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகம் - புதுச்சேரியில் ஓய்கிறது தேர்தல் பிரச்சாம்

இன்று மாலையுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரச்சாரம் ஓய்கிறது. மாலை 7 மணிக்குப் பிறகு, திரையரங்கு, தொலைக்காட்சி, வேறு எந்த மின்னணு ஊடகம் மூலம் பிரசாரங்கள் கூடாது என்றும், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 104 of 104 )   NEXT | LAST