இன்றைய தினம் மோதல் IPL 2021

இன்றைய தினம் டெல்லியில் நடைபெறவுள்ள 27வது போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சிஎஸ்கே 6 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் அதிரடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் அதிரடி 42 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 75 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 20 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. டெல்லி கேப்பிட்டஸ் தரப்பில் அந்த அணியின் இஷாந்த் சர்மா, ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் விளையாடி வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நடராஜன் ட்வீட்

ஐபிஎல் 14ஆவது சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த நடராஜன், திடீரென்று ஏப்ரல் 22ஆம் தேதி தொடரிலிருந்து விலகினார். அவருக்கு முழங்கால் பகுதியில் வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டி உள்ளது. இதனால்தான் தொடரிலிருந்து விலகினார் என ஹைதராபாத் அணி நிர்வாகம் விளக்கம் தந்தது.

இந்நிலையில் தற்போது ட்வீட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நடராஜன், “இன்று எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்திய பிசிசிஐக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சூப்பர் ஓவரில் டெல்லி திரில் வெற்றி....!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணியும் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்தனர்.

இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மும்பை Vs பஞ்சாப்: இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் மும்பை 2 வெற்றிகளும், பஞ்சாப் ஒரு வெற்றியும் பெற்றுள்ளன. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி மும்பையை வீழ்த்தியது #IPL2021

மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி நிதானமாக ஆடி வெற்றி . முதலில் களமிறங்கிய மும்பை 20 ஓவருக்கு 137/9 ரன்கள் எடுத்தது . இதையடுத்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது . மும்பையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பந்து வீச்சு சிறப்பாக இருந்தது கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

வெற்றிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: - பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் அடித்திருந்த ரன்கள் சவாலானவை என்றே நினைக்கிறேன்.
பவர் பிளேயை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இரு அணிகளுமே முயற்சித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடு ஓவர்களில் நாங்கள் சற்று சிறப்பாக பேட் செய்தோம் என நான் நினைக்கிறேன். இது போன்ற மைதானங்களில் அனைத்து வீரர்களும் பல போட்டிகள் விளையாடியுள்ளனர்.

பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது ஃபீல்டிங் இன்றைய போட்டியில் அசத்தலாக இருந்தது. இன்றைய போட்டியில் நடந்த ரன் அவுட்கள் மற்றும் கேட்ச்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரோகித் புதிய சாதனை

இன்றைய போட்டியில் அவர் இரண்டு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் கேப்டனாக 4000 ரன்களை கடந்துள்ளார். ரோகித் சர்மா 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை 5324 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 39 அரைசதம், ஒரு சதம் அடங்கும். அதேபோல், சர்வதேச டி20 போட்டிகளில் 2864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதம், 22 அரைசதம் அடங்கும்.

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற மைல்கல்லையும் இந்தப் போட்டியில் எட்டினார் ரோகித். அவர் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 217 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தோனி 216 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 201, சுரேஷ் ரெய்னா 198 என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை காலமானார்

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை கே. விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 92. தென்னிந்திய ரயில்வேயில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற விஸ்வநாதனுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.

விஸ்வநாதனின் மறைவு குறித்து ஆனந்தின் மனைவி அருணா ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஆனந்துக்குப் பக்கபலமாக அவர் இருந்தார். ஆனந்தின் அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் வெற்றிகளையும் பார்த்துள்ளார். ஆனந்தின் சாதனைகள் குறித்து பெருமிதம் கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை பட்டியலில் கோலியை முந்திய பாபர் அஸாம்

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 103, 31, 94 ரன்கள் எடுத்து அசத்தினார் பாபர் அஸாம். இதையடுத்து ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஒருநாள் தரவரிசையில் ஜாகீர் அப்பாஸ், மியாண்டட். முகமது யூசுப் ஆகியோருக்கு அடுத்து முதலிடம் பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை பாபர் அஸாம் பெற்றுள்ளார்.

கோலி நீண்ட நாளாக முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 278 of 279 )   NEXT |  LAST