Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 350 சிக்சர்களை கடந்து சாதனை

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய, ஆட்டத்தில் 3-வது வீரராக களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 28 பந்தில் (4 பவுண்டரி, 2 சிக்சருடன்) 40 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வரும் கிறிஸ் கெய்ல் நேற்று அடித்த 2 சிக்சர்களால் 351 சிக்சர்களை எடுத்துள்ளார். இந்த வரிசையில், தென்ஆப்பிரிக்க வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ் 237 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 216 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 214 மற்றும் 201 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி

நேற்றைய (திங்கள்கிழமை 12/04/2021) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.

222 ரன்கள் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோரா களமிறங்கினர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. இரண்டாவது பந்தில் சாம்சன் 1 ரன் எடுத்தார். 3-வது பந்தில் கிறிஸ் மாரிஸ் 1 ரன் எடுக்க கடைசி 3 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால், 4-வது பந்தை சாம்சன் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு அசத்தினார். 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த பந்தை சாம்சன் லாங் ஆஃப் திசைக்கு அனுப்பியும் ரன் ஓடவில்லை. இதனால், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால், பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயன்று பவுண்டரி எல்லையில் சாம்சன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி பந்தில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணித் தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட்சன், மெரெடித் தலா 1 விக்கெட்டைையும் வீழ்த்தினர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
டாஸ் வென்ற Delhi Capitals முதலில் பந்துவீச முடிவு

தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் கேப்டனாக தனது முதல் போட்டியில் டாஸ் வென்றார். மும்பையில் நடக்கும் இன்றைய போட்டியில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அதிரடி காட்டிய ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணி வெற்றி

முதல் ஐபிஎல் போட்டியில்டா டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூர் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து மும்பை அணியை முதல் ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியது. வெறும் 27 பந்துகளில் ஏபிடி வில்லியர்ஸ் 48 ரன்கள் எடுத்தார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டி இன்று சேப்பாக்கத்தில் தொடக்கம்... மும்பை - பெங்களூரு பலப்பரீட்சை

இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறுகின்றன. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை அணியும்-பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலானவை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கே நடைபெற உள்ளன. வரும் மே மாதம் 30-ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நடப்பாண்டின் ஐ.பி.எல் போட்டிகளில் மைதானத்திற்குள் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அதிர்ச்சியில் IPL2021 வெறியர்கள்

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பிசிசிஐ எடுத்து வருகிறது.

பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது. வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
'தோனியாக இருக்க விரும்பவில்லை.. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்'- சஞ்சு சாம்சன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2021-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் புள்ளிப்பட்டியல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட ராஜஸ்தான் அணியை சஞ்சு சாம்சான் மீட்பார் என அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் கேப்டன்சியில் தோனி போல் செயல்பட மாட்டேன் என கூறியுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதனால் மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் மும்பையில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த முடியும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒருவேளை, மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ஹைதராபாத், இந்தூர் ஆகிய இரு நகரங்களும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த தயாராக உள்ளதாகவும் அறியப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 279 of 279 )   NEXT | LAST