புதிய டவ்-தே புயல் காரணமாக இந்த இந்த மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை

டவ்-தே புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரிம் ஈரோடு, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதே போல தென் மேற்கு அரபிக்கடலில் சூறாவளி காற்றுஇ மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்களில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நாளை புதிய டவ்-தே புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இதனால் அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு டவ்-தே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டவ்-தே புயல் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் (Tamil Nadu) மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிகைகளையும் எடுத்து வருகிறது.

புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரிம் ஈரோடு, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதே போல தென் மேற்கு அரபிக்கடலில் சூறாவளி காற்றுஇ மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்களில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரெட் அலர்ட்- 2021 ஆம் ஆண்டின் முதல் Tauktae புயல் - வானிலை மையம் எச்சரிக்கை

2021 ஆம் ஆண்டின் முதல் புயல் அரபிக்கடலில் அடுத்த சில நாட்களில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது மியான்மரால் வழங்கப்பட்ட ‘Tauktae’ என்று பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 16 க்குள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஓட்டியுள்ள மாநிலங்கள் புயலின் தாக்கத்தை காணக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tauktae புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஓட்டியுள்ள லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, காரைக்கால் பகுதி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வரும் 3 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . ஏனெனில் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தென் தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் மேற்கு அரபிக் கடலில் புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதன் மூலம் வரும் 14 ஆம் தேதி, தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.இந்த தாழ்வுப் பகுதி, வடக்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக வரும் 16 ஆம் தேதி உருவெடுக்கும். இதன் மூலம் லட்சதீபம், கேரளா மற்றும் தென் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.எனவே மீனவர்கள் 14 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பி விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்த மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 4, 5-ம்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், 6, 7-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியமாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைபெய்யக் கூடும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நாளை பல மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்கும்

நாளை பல மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஏப்.,30 to மே 3-ம் தேதி வரைக்கும் இந்த இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாளை (ஏப்.,30) முதல் மே 3-ம் தேதி வரைக்கும் தமிழகத்தில் தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அடுத்த 5 நாட்களுக்கு இந்த இந்த மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு ள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று நண்பகலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதக்கியது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திடீர் மழை பெய்து பூமியை குளிர்வித்தது. இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர், நாமக்கல் பகுதியில் மிதமான மழையும் திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்த மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது. அதன்படி, இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலான காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

அதேநேரத்தில் நாளை( ஏப்.16) தென்தமிழகம், வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 115 of 116 )   NEXT |  LAST