தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் கனமழை!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை,தேனி,திண்டுக்கல், திருவண்ணாமலை,தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

14 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 16ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழித்துறை, உசிலம்பட்டியில் தலா 4, ஜெயங்கொண்டம், திருபுவனத்தில் தலா 2செமீ மழை பதிவானது.

மதுரையில் கோரிப்பாளையம், புதூர் ,மாட்டுத்தாவணி ,சிம்மக்கல், திருப்பாலை அய்யர்பங்களா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்

ஏப்ரல் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

அதேபோல ஏப்ரல் 5 முதல் 7 ஆம் தேதி வரை கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக ஏப்ரல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 116 of 116 )   NEXT | LAST