>>

The modern-day Titanic embarked on the maiden voyage of the world's largest cruise...

நவீன கால டைட்டானிக் முதல் பயணத்தை தொடங்கியதுஉலகின்...

நவீன கால டைட்டானிக் முதல் பயணத்தை தொடங்கியது

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான Icon of the Seas, மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது. 20 தளங்களை கொண்ட இக்கப்பல், சுமார் 1,200 அடி நீளம் கொண்டது. இதில் 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், ஒரு திரையரங்கம், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. அதிகபட்சமாக 7,600 பேர் பயணிக்கலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

A powerful earthquake struck Japan's Ishikawa region...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால், ஜப்பானின்...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால், ஜப்பானின் இஷிகாவா பகுதியில் 32,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு! மேற்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

In Gaza, journalists killed in Israeli bombardment...

காசாவில், இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட...

காசாவில், இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

300 gallstones removed from Taiwanese woman's body;

தைவான் பெண்ணின் உடலிலிருந்து 300 பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டன; அதிகம் ‘பபிள் டீ” அருந்தியதால் நேர்ந்த விபரீதம்

வெற்று நீரை காட்டிலும் “பபிள் டீயை” அதிகம் விரும்பி குடித்து வந்ததாகக் கூறப்படும் பெண் உடலில் முன்னூறுக்கும் அதிகமான பித்தப்பை கற்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

English princess visiting Sri Lanka!

இலங்கைக்கு விஜயம் செய்யும் இங்கிலாந்து இளவரசி!

இங்கிலாந்து இளவரசி ஹேன், வரும் ஜனவரி மாதம் 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Relatives of CNN journalist killed in Israeli attack in Gaza |

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின் உறவினர்கள் பலி | பூர்வீக வீடு முற்றாக தரைமட்டம்

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிஎன்என்னின் காசா செய்தியாளரின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் பூர்வீக வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் மேற்கொண்ட ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவிற்கு பேரழிவை  கொண்டுவந்த நிலையில் சிஎன்என்னின் காசா செய்தியாளர் இப்ராஹிம் டகமான் அங்கிருந்து செய்திகளை வெளியிட்டு வந்தார்.

எனினும் அவர் பின்னர் தனது குடும்பத்தினருடன் எகிப்திற்கு தப்பிச்சென்றார் எனினும் ஞாயிற்றுக்கிழமை காசாவில் சிக்குண்டிருந்த தனது உறவினர்கள் தனது உறவினரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதை அறிந்துள்ளார்.

சிஎன்என் செய்தியாளரின் 9 உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவருடைய பூர்வீகவீடும் அந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீடு இலக்குவைக்கப்பட்டதால் தரைமட்டமாகியுள்ளது.

நான் வளர்ந்த எனது பிள்ளைகளை வளர்த்த அந்த வீட்டின் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு மூலையையும் என்னால் மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

டஹ்மானின் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை கரும்நாளாக காணப்படுகின்றது.

பெய்ட் லகியாவில் அவரது உறவினர்கள் வாழ்ந்த வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதில் பல உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி அன்றே அவருக்கு கிடைத்துள்ளது.

இரண்டு உறவினர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர்.

அவர்கள் மிகவும் அமைதியானவர்கள் என தெரிவித்துள்ள டஹ்மன் அவர்கள் தங்கள் குடும்பங்களை பிள்ளைகளை வளர்ப்பதிலேயே காலத்தை செலவிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எந்த அமைப்புடனும் தொடர்பிருக்கவில்லை அவர்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆண்டவனை பிரார்த்தியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரின் உறவினர்கள் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

முற்றாக சிதைவடைந்துள்ள கட்டிடத்திலிருந்து புகைமண்டலம் வெளிவருவதை காணமுடிகின்றது.

வீதியில் சிதைவுகளை காணமுடிகின்றது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Israel forces - Hamas shelling in Gaza: 240 dead

காசாவில் இஸ்ரேல் படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது சரமாரி குண்டு வீச்சு: 240 பேர் கொன்று குவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். காசாவில் இஸ்ரேல் படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஆனால் இஸ்ரேல் அதனை பொருட்படுத்தாமல் தெற்கு காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. நேற்றும் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, காசாவில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எட்டு வாரப் போரினால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக உதவித் தொடரணிகளை கொண்டு வர வேண்டாம் என்று இஸ்ரேல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் கூறியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

December is coming.. Terrible earthquake in the Philippines.. Tsunami warning.. Extreme tension

டிசம்பர் வந்துருச்சுல்ல.. பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. உச்சக்கட்ட பதற்றம்

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் இன்று மிக சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் அது 7.5 ஆக பதிவாகி இருந்தது. மிண்டானோவோ தீவில் கடற்பகுதியின் மையத்தின் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களும், வீடுகளும் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளும் இந்த சுனாமி எச்சரிக்கையால் கலக்கத்தில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், பொதுவாக டிசம்பர் என்றாலே இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஒருவித நம்பிக்கை நிலவி வரும் நிலையில், இந்த சுனாமி எச்சரிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தெற்காசியாவில் இந்தியா உட்பட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சுனாமி வருவதற்கு காரணமானது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள சமயம் தமிழ் வாட்ஸ் அப் சேனலை பின் தொடருங்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 52 )   NEXT |  LAST