Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

A woman faints when her childhood fear of being trapped in an elevator comes true

மின்தூக்கியில் சிக்கிவிடுவோமா என்ற சிறுவயது பயம் உண்மையாகியதில், மயங்கி விழுந்த பெண்

சமீபத்தில் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மின் தூக்கியில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அவருக்கு சிறுவயதிலிருந்தே மின் தூக்கியில் சிக்கிக் கொள்வது என்றால் பயமாம். அது இப்போது நடந்துவிட்டதை எண்ண்ணி அப்பெண் கதறி அழும் காணொளியை அவரே தனது டிக் டோக்கில் வேதனையுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் முதலில் பெற்றோருக்கும், பின் தீயணைப்பு மீட்புத் துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின், பிராணவாயு பற்றாக்குறையால் மயக்கமடைந்து, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பிறகு நலமுடன் வீடு திரும்பியதாக அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

7.5 Richter earthquake in the Philippines!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Israel-Hamas war started again!

மீண்டும் துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர்! லெபனானில் உள்ள ஹெஸ்பெல்லா அமைப்பினர் மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்!

ஈரான் ஆதரவு குழுவான ஹெஸ்பெல்லா அமைப்பினர், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக துணை நின்று இஸ்ரேலை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஹெஸ்பெல்லா அமைப்பினரை குறிவைத்து அழிக்கும் நடவடிக்கைகளை, இஸ்ரேல் படையினர் துரிதப்படுத்தி உள்ளனர்.

அதன் பேரில், தெற்கு லெபனானில் நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Earthquake in Nepal;

நேப்பாளத்தில் நிலநடுக்கம்; 128 பேர் பலி

நேபாளம், நவ 4 – நேற்று நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் 6.4 மெக்னிதியுட் அளவில் உலுக்கிய நிலநடுக்கத்தில் 128 பேர் பலியாகினர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

2nd person who received a pig heart transplant also died

பன்றி இதயம் பொருத்தப்பட்ட 2வது நபரும் உயிரிழப்பு

மேரிலாந்து ;அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபர், 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Israel attack on Gaza refugee camp war crime: UN condemns

காசா அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் போர்க்குற்றம்: ஐ.நா கண்டனம்

வாஷிங்டன்: காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Earthquake in Indonesia

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

ஜாகர்த்தா: இந்தோனேஷியாவில் இன்று(நவ.,02) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Ranil - bus conflict!

ரணில் – பஸில் கடும் மோதல்! – ஆட்டம் காணுமா அரசு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளார் என்று அக்கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுஜன பெரமுன வழங்கியுள்ள பெயர்ப் பட்டியலின் பிரகாரம் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கவில்லை என்று பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக அமைச்சுக்களைக் கொடுத்துள்ளமைக்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளமைக்குக் கடந்த சில நாள்களாகத் தொடர் ஊடக சந்திப்புக்களை நடத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை எதிர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பஸில் ராஜபக்ஷவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தாது ஜனாதிபதி அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளமைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிட்டுவரும் பொதுஜன பெரமுனவினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்கிரமசிங்க எவரது பின்னாலும் சென்று ஜனாதிபதிப் பதவியைப் பெறவில்லை என்றும், மாறாக அவரை அழைத்தே ஜனாதிபதிப் பதவியை பொதுஜன பெரமுன வழங்கியது என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மாறி மாறி கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் அரசுக்குள் முறுகல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் பட்ஜட் வாக்குகெடுப்பில் இது தாக்கத்தைச் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Ukraine attacked in the capital of Russia... Putin is preparing to retaliate!

ரஷ்யாவின் தலைநகரிலேயே தாக்குதல் நடத்திய உக்ரைன்… பதிலடிக்கு தயாராகும் புதின்!

ரஷ்யாவின் தலைநகரிலேயே உக்ரைன் சர்வ சாதாரணமாக தாக்குதல் நடத்தியிருப்பது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக அதிபர் புதினின் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Missing Billionaire's Body Parts Found in Suitcase - Bagheer Background

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட காணாமல் போன பில்லியனரின் உடல் பாகங்கள் - பகீர் பின்னணி

நியூயார்க் போஸ்ட் படி, அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீரோடைக்கு அருகில் ஒரு சூட்கேஸில் அல்கபாவின் உடல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிவப்பு நிற சூட்கேஸில் உடல் உறுப்புகள் நிரம்பியதைக் கண்ட பிறகு இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொழிலதிபர் ஜூலை 19 முதல் காணவில்லை.

உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி, குழந்தைகளின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் பெட்டியை பரிசோதித்ததாகவும், அதில் அல்கபாவின் கால்கள் மற்றும் முன்கைகளை கண்டெடுத்ததாகவும் கூறியுள்ளது நியூயார்க் போஸ்ட். அவரது மற்றொரு கை ஓடையில் கண்டெடுக்கப்பட்டது.

காணாமல் போன தலை மற்றும் உடற்பகுதியை புதன் கிழமை போலீசார் கண்டுபிடித்தனர். உடல் உறுப்புகள் சுத்தமாக துண்டிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் அல்கபாவின் உடல் வெட்டப்படுவதற்கு முன்பு அவர் மூன்று முறை சுடப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியது.

அவர்களால் அல்காபாவை அவரது கைரேகைகள் மற்றும் உடல் பாகங்களில் உள்ள தனித்துவமான பச்சை குத்தல்கள் மூலம் அடையாளம் காண முடிந்தது. மார்கா அறிக்கையின்படி, அகல்பா மியாமியில் இருந்து மாறி பார்சிலோனாவில் இருந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அர்ஜென்டினாவில் தங்கியிருந்தார்.

அல்காபா சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து கிரிப்டோகரன்சி மூலம் தனது செல்வத்தை குவித்தார். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ள அவர், தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

இவர் வாடகைக்கு எடுத்திருந்த அடுக்குமாடி குடியிருப்பை, ஜூலை 19 அன்று காலி செய்வதாக இருந்தது, ஆனால் அதை செய்ய தவறிவிட்டார். தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை, அதன் பிறகு வீட்டு உரிமையாளர் காணாமல் போன புகாரைப் பதிவு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்கபாவின் மரணம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், பல கடன்கள் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 52 )   NEXT |  LAST