Advertisement

Missing Billionaire's Body Parts Found in Suitcase - Bagheer Background

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட காணாமல் போன பில்லியனரின் உடல் பாகங்கள் - பகீர் பின்னணி

நியூயார்க் போஸ்ட் படி, அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீரோடைக்கு அருகில் ஒரு சூட்கேஸில் அல்கபாவின் உடல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிவப்பு நிற சூட்கேஸில் உடல் உறுப்புகள் நிரம்பியதைக் கண்ட பிறகு இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொழிலதிபர் ஜூலை 19 முதல் காணவில்லை.

உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி, குழந்தைகளின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் பெட்டியை பரிசோதித்ததாகவும், அதில் அல்கபாவின் கால்கள் மற்றும் முன்கைகளை கண்டெடுத்ததாகவும் கூறியுள்ளது நியூயார்க் போஸ்ட். அவரது மற்றொரு கை ஓடையில் கண்டெடுக்கப்பட்டது.

காணாமல் போன தலை மற்றும் உடற்பகுதியை புதன் கிழமை போலீசார் கண்டுபிடித்தனர். உடல் உறுப்புகள் சுத்தமாக துண்டிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் அல்கபாவின் உடல் வெட்டப்படுவதற்கு முன்பு அவர் மூன்று முறை சுடப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியது.

அவர்களால் அல்காபாவை அவரது கைரேகைகள் மற்றும் உடல் பாகங்களில் உள்ள தனித்துவமான பச்சை குத்தல்கள் மூலம் அடையாளம் காண முடிந்தது. மார்கா அறிக்கையின்படி, அகல்பா மியாமியில் இருந்து மாறி பார்சிலோனாவில் இருந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அர்ஜென்டினாவில் தங்கியிருந்தார்.

அல்காபா சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து கிரிப்டோகரன்சி மூலம் தனது செல்வத்தை குவித்தார். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ள அவர், தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

இவர் வாடகைக்கு எடுத்திருந்த அடுக்குமாடி குடியிருப்பை, ஜூலை 19 அன்று காலி செய்வதாக இருந்தது, ஆனால் அதை செய்ய தவறிவிட்டார். தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை, அதன் பிறகு வீட்டு உரிமையாளர் காணாமல் போன புகாரைப் பதிவு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்கபாவின் மரணம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், பல கடன்கள் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST