தளபதி 66! வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு!

விஜய்யின் 66 ஆவது படம் குறித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்த தகவலை வெளியிட்டு அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். வம்சி இயக்கும் இந்த படத்தை, தெலுங்கில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள, தில் ராஜு, தன்னுடைய ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 66 பட தகவலை உறுதி செய்துள்ளனர். தளபதி விஜய், இந்த புகைப்படத்தில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார்.

மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணைவது மகிழ்ச்சி என்றும், இந்த படம் குறித்த மற்ற முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துக்களுடன் விரைவில் இப்படம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇