Advertisement

5 benefits of drinking dry grape soaked water

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள்

உலகிலேயே அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று உலர் திராட்சை. இதனை கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பழம் என பல பெயர்களிலும் அழைப்பார்கள். நாம் வழக்கமாக சக்கரைப் பொங்கலுக்கு பயன்படுத்துவோமே, அதே பழம்தான். இந்தப் பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதனால்தன் பலரும் இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஊற வைத்த உலர் திராட்சையில் விட்டமின், மினரல், நார்ச்சத்து என நம் உடலை பல வழிகளிலும் மேம்படுத்தக் கூடிய பல வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது. இதற்கு முன் இதை சாப்பிடாமல் இருந்தீர்கள் என்றால், இனி உங்கள் டயட்டில் உலர் திராட்சை சேர்த்துக் கொண்டு, அதை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை தினசரி குடியுங்கள். உலர் திராட்சை ஊறை வைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் இதோ...

புளித்த ஏப்பங்களையும் பிற வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது : உலர் திராட்சை நீரை குடிப்பதால் பல வயிற்று பிரச்சனைகளை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது : உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. குறைந்தது ஒரு வாரம் இந்த நீரை குடித்தால், இதய நோய் வரும் ஆபத்து குறையும். அதோடு உங்கள் கல்லீரலையும் சுத்தபடுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : உலர் திராட்சை ஊற வைத்த நீரில் அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது. அதோடு உங்களின் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.

முடி உதிர்வை தடுக்கிறது : முடி உதிர்வை எப்படி தடுப்பது என பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உலர் திராட்சை இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். உலர் திரட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது : இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, இதிலிருக்கும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையை தடுத்து உங்களுக்கு நல்ல தூகத்தை வரவழைக்கிறது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST