Advertisement

A 16-year-old daughter who tried to save her father was hacked to death

தந்தையை காப்பாற்ற முயன்ற 16 வயது மகள் வெட்டிக் கொலை

தந்தையை காப்பாற்ற முயன்ற போது மகளை ஒரு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கல்யாண்பூர் அடுத்த ஷம்புச்சக் பகுதியை சேர்ந்த ராம்தர்ஷன் கிரி என்பவர், தனது கரும்பு தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து வயல்களில் கரும்புகளை வெட்டி கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கரும்பு தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் ராம்தர்ஷன் கிரியை திடீரென சரமாரியாக தாக்கினர். இதற்கிடையில், ராம்தர்ஷனின் 16 வயது மகளான குஷ்பு குமாரி தனது தந்தையை காப்பாற்றுவதற்காக அந்த கும்பலிடம் போராடினார். அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், அந்த சிறுமியை அரிவாளால் வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமி அடுத்த சில நிமிடங்களில் கரும்பு தோட்டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டனர். மக்களைக் கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் டிஎஸ்பி சத்யேந்திர குமார் சிங் கூறுகையில், ‘இரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

சம்பவ நாளில் சிறுமி குஷ்பு குமாரியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சிறுமி தனது தந்தையை காப்பாற்ற முயன்ற போது கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் புகார் வந்தவுடன் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST