பத்ம விபூஷண் விருது பெற்ற பாபாசாகேப் புரந்தரே காலமானார்

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், 2019-ம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட புரந்தரே, புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணத்தால் அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொள்ளாததை அடுத்து, அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார்.

தொடர்ந்து, புரந்தரேவின் உடல் நிலை நேற்று மேலும் மோசமானதை அடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 99.

புரந்தரேவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  BalwantMoreshwarPurandare   RIPBalwantMoreshwarPurandare   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]