Advertisement

Copies of college certificates can be obtained free of charge from: Department of Higher Education |

கட்டணமின்றி கல்லூரிச் சான்றிதழ் நகல் பெறலாம்: உயர் கல்வித்துறை | mycertificates.in

Enable Javscript for better performance

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மாணவி, மாணவிகள், மழை, வெள்ளத்தில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்திருந்தால் கட்டணமின்றி அதன் நகல் வழங்க உயர் கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், “மிக் ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் தாங்கள் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற அச்சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவ / மாணவிகள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு, அவர்கள், எந்த மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தார்களோ, அதே மாவட்டத்திலேயே, அவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலேயே வழங்கப்படும்.

மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST