Advertisement

Discovery of medicine that cures appetite for cancer patients at a cost of 2 rupees!!

2 ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டுபிடிப்பு!!

புதுச்சேரி ஜிப்மரில்

புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி

யில் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக

ஜிப்மர்

சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்திய நாடு தற்போது புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகளினால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாகவும் உள்ள இவ்வியாதிக்கு கை கொடுப்பது ஆராய்ச்சிகள் மட்டுமே. புற்றுநோய் சிகிச்சையானது மூன்று சிகிச்சை முறைகளை கொண்டது. அவை மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகும். இவை அனைத்திலும் மருத்துவ முன்னேற்றத்துக்காக ஆராய்ச்சிகள் செய்து வரப்படுகிறது. மற்ற உலக நாடுகளில் இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் 20-30 வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவில் இந்த ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடத்தப்படுகின்றன.

பல இடங்களில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக கலந்து செய்யும் ஆராய்ச்சிகளே (Multicenter research) சிகிச்சையில் மாற்றங்களை தரவல்லது. இதுபோன்ற ஆராய்ச்சிகளை இந்திய நாட்டில் அதிகரிப்பதால் ஆக்கபூர்வமான பல சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்க உதவிடும். இதனை கருத்தில் கொண்டு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி உதவி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் (BIRAC), இந்திய அரசின் கீழ், அதன் முதன்மைத் திட்டமான நேஷனல் பயோஃபார்மா மிஷன் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளின் பங்களிப்பை கோரியுள்ளது. இதன் ஒரு முயற்சியாக, Network of Oncology Clinical Trials India (NOCI) என்ற கூட்டமைப்பு ஜிப்மர் மருத்துவமனையை தலைமையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

 

ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.9.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 6 மருத்துவமனைகள் பங்கேற்று உள்ளன. இக்குழு 6 விதமான புற்றுநோய்களின் விவரங்களை பல தரப்பட்ட நோயாளிகளிடமிருந்து சேகரித்து வருகிறது. மேலும், இக்குழு தங்களுடைய மருத்துவமனைகளில் மருத்துவ ஆராய்ச்சி பரிசோதனைகளையும் துவங்கி உள்ளது. இதன்மூலம் நோய்க்கான சுலபமான தீர்வுகளையும், மருந்து தயாரிப்புக்கான பரிந்துரைகளையும் அளிக்க ஏதுவாக அமையும்.

இவ்வாறு சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனையின் ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதோடு, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியும் இதனை பசியின்மையால் அவதியுறும் கீமோதெரபி நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறது. ஆராய்ச்சி மேம்பாட்டினை நோக்கமாக கொண்டு என்ஓசிஐ குழுவானது இதுபோன்ற ஆராய்ச்சி பரிசோதனைகளின் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், காணொளிகள் ஆகியவற்றின் மூலமாக எடுத்துரைத்து வருகிறது. இக்குழு புற்றுநோய் பற்றிய தகவல்களை தங்களுடைய இணையதளத்தில் (https://noci-india.com) பதிவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST