“பன்றி, மாட்டிறைச்சிக்கு நோ : ஹலால் இறைச்சி மட்டுமே” இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டயட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான புதிய டயட் பிளானை அறிவித்துள்ளது. இது பரவலான நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. அதோடு நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். டயட் பிளானில் அப்படி என்ன மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது?

இந்திய அணி வீரர்கள் பன்றி மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதித்துள்ளது இந்த புதிய டயட் பிளான். “பன்றி மற்றும் மாட்டிறைச்சி எந்தவிதமான உணவு வடிவிலும் உட்கொள்ள கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்” என கேட்டரிங் தேவை குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தான் நெட்டிசன்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். வீரர்களின் உணவு விருப்பத்தில் இது மாதிரியான கட்டுப்பாடுகள் கூடாது எனவும் சொல்லியுள்ளனர் சிலர்.

பெரும்பாலும் இந்திய அணி உள்நாடு, வெளிநாடு என எங்கு விளையாடினாலும் ஹலால் உணவு தான் டயட் பிளானில் இடம் பெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் இஸ்லாமிய வீரரும் விளையாடுகிறார்.

அதுவே இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராகு விளையாடும் நியூசிலாந்து அணி தனது உணவுக்கான மெனுவில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி அவசியம் தேவை என தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் கான்பூரில் வரும் வியாழன் அன்று தொடங்குகிறது.

  Cricket   BCCI_PROMOTES_HALAL   BCCI   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]