Advertisement
Kia Seltos 2023 காரில் இடம்பெறும் முக்கிய சிறப்பம்சங்கள்!

​இந்தியாவில் கார் விற்பனையில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த Kia Motors சமீபத்தில் அதன் பிரபலமான Seltos காரின் புதிய 2023 Facelift மாடலை வெளியிட்டது. இதில் புதிய வசதிகள் பலவற்றை கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட டிசைன்

டிசைன் பொறுத்தவரை பார்க்கும்போதே கண்களுக்கு தெரியும் வகையில் இந்த புதிய செல்டோஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய முன்பக்க நோஸ் கிரில், புதிய பம்பர், 18 இன்ச் அலாய் வீல் (17 இன்ச் அலாய் வீல் ஆப்ஷனல் வசதி), புதிய லைட் கிளஸ்டர், LED இண்டிகேட்டர், கம்பீரமான கட்டமைப்பு கொண்டுள்ளது.

புதிய பேனரோமிக் சன் ரூப்

காரில் இப்போது பலரும் எதிர்பார்த்த டூயல் பேன் சன் ரூப் வசதி இடம்பெறுகிறது. இதனால் இனி கார் உள்ளே பயணிகள் சவுகரியத்திற்கு சன் ரூப் முழுதாக பயன்படும்.

மற்ற சிறப்பம்சங்கள்

இதைத்தவிர டூயல் கிளைமேட் கன்ட்ரோல், 10.25 இன்ச் இன்போடைன்மெண்ட் உள்ள புதிய டூயல் ஸ்க்ரீன் பேனாரோமிக் டிஸ்பிளே மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமன்ட் கிளஸ்டர் வசதி, UVO கனெக்டெட் கார் டெக்னாலஜி, அலெக்சா வசதி, ஆம்பிஎண்ட் லைட்டிங், பார்க்கிங் பிரேக், ஏர் பியூரிபயர், 8 ஸ்பீக்கர் கொண்ட Bose சவுண்ட் சிஸ்டம் போன்றவை உள்ளன.

​புதிய டர்போ என்ஜின்

இதில் இப்போது புதிதாக ஒரு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அரசின் புதிய BS6 Phase 2 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பு இருந்த அதே 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களும் உள்ளது.

​ADAS பாதுகாப்பு

பாதுகாப்பு என்ற பெயருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக புதிய லெவல் 2 ADAS (Advanced Driver Assistance System) இந்த காரில் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 வகையான தானியங்கி பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. அதில் முக்கிய பாதுகாப்பு வசதிகளாக Smart Cruise Control, Front Collision Warning, Lane Keeping Assist, Spot Collision Avoidance போன்றவை உள்ளன. கூடுதலாக 6 ஏர் பேக் வசதி காரில் வருகிறது.

​மற்ற விவரங்கள்

இந்த கார் Tech Line, GT Line மற்றும் X Line என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் அறிமுகம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். முன்பதிவு வரும் ஜூலை 14 முதல் தொடங்குகிறது. ஜூலை 14 முன்பதிவு செய்பவர்களுக்கு கியா நிறுவனத்தின் புதிய K Code முறையில் டெலிவரி செய்யப்படும். இதை Kia App அல்லது இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம். மற்றவர்கள் ஜூலை 15 முதல் முன்பதிவு செய்யலாம்.​

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST