5,000 வீரர்கள் கொண்ட சிறப்பு படையால் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது

கொலம்பியாவில் கடந்த 25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் டைரோ அன்டோனியோ உசுகா (50). இவர் ஒட்டோனெயில் என்றே பரவலாக அறியப்படுகிறார்.

அவரை பிடிப்பதற்காக சுமார் 5 ஆயிரம் வீரர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இந்த சூழலில்தான், கொலம்பியா - பனாமா நாட்டு எல்லைப் பகுதியான நெக்கோக்லி வனப்பகுதியில் அன்டோனியோ பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில், 22 ஹெலிகாப்டர்களுடன் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுரங்கம் ஒன்றில் மறைந்திருந்த அவரை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகஅரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள் :
   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇