Advertisement

No matter how old you are, will you be young?

எவ்வளவு வயதானாலும் இளமையா இருக்கனுமா..?

அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். ஆனால் வயது ஏற ஏற நம்முடைய சருமத்தின் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு தோளில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பல்வேறு விஷயங்கள் நமக்கு வயது கூடுவதை மிகவும் வெளிப்படையாக காண்பித்து விடும். ஆனால் இனி உங்களுக்கு அதை பற்றிய கவலை வேண்டாம்

இன்றைய நிலையில் சருமத்தை பராமரித்து இளமையாகவே தோற்றமளிக்க பல்வேறு சிகிச்சைகள் முறைகளும் சரும பராமரிப்பு குறிப்புகளும் பல்வேறு தரப்பினரும் பின்பற்றி வருகின்றனர். சிலர் இந்த முறைகளைப் பின்பற்றி மீண்டும் மீண்டும் தனது சருமத்தை இளமையாக மாற்றிக் கொள்ள முடியும். சிலர் இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் வயதானால் சருமத்தில் ஏற்படும் அறிகுறிகளை குறைக்க முடியும். அந்த வகையில் எப்போதும் இளமையாக தோற்றமளிக்க உதவும் சில சரும பராமரிப்பு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சூரியனிலிருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும்: நீங்கள் இளமையாக தோற்றம் அளிக்க வேண்டும் எனில் முதற்கட்டமாக சூரிய கதிர்களில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க வேண்டும். சூரிய கதிர்கள் நமது சருமத்தில் நீண்ட நேரம் படும் போது அவை வயதான அறிகுறிகளை மிக விரைவாகவே வெளிப்படுத்தி விடுகின்றன. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் நமது சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்தும்.

இந்த இரண்டும் தான் நமது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. வெளியே செல்லும்போது 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் உடைய சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும்.

ஆன்ட்டி ஏஜிங் சீரம் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்: தற்போது சந்தையில் பல்வேறு விதமான ஆண்டி ஏஜிங் சீரம் மற்றும் கிரீம்கள் மிக எளிதாக கிடைக்கின்றன. இவற்றில் நமது சருமத்தில் உள்ள சுருக்கங்களை மறைக்கவும் இளமையாக தோற்றமளிக்கவும் பல்வேறு விதமான ப்ராடெக்டுகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள வைட்டமின் சி, ஹைட்ராலிக் ஆசிட் மற்றும் பெப்டைட்ஸ் ஆகியவை சருமம் இளமையாக தோற்றமளிக்க உதவுகின்றன.

தினசரி மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும் : வயது ஏற ஏற நமது சருமம் மிகவும் வறண்டு காட்சியளிக்கும். அந்த சமயத்தில் தான் சருமத்தில் சுருக்கங்களும் வரிவரியாக கோடுகளும் தோன்ற ஆரம்பிக்கும். தினசரி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தும் போது அவை சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. தினசரி காலையும், மாலையும் மாய்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

ஃபேஸ் வாஷை பயன்படுத்தவும்: முகம் கழுவும் போது ஜென்டிலான கிளன்சிங் ஃபேஸ் வாஷை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. இதனால் வயதாகும் போது நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசை மிகவும் குறைவாகவும், அதே சமயம் சருமம் மிகவும் சென்சிட்டிவாகவும் மாறிவிடும். எனவே ஃபேஸ் வாஷை தேர்வு செய்யும்போது சருமத்தை மென்மையாக மாற்றக் கூடிய வகையில் உள்ள பேஸ் வாஷை தேர்வு செய்ய வேண்டும்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST