ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வயர்டு இயர்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த இயர்போன் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. வயர்லெஸ் ஆடியோ பிரிவில் கவனம் செலுத்தி வரு்ம நிலையிலும், ஒன்பிளஸ் புதிதாக வயர்டு இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன்களில் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி, 9.2 எம்எம் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இதன் டிசைன் மற்றும் ஸ்டைலிங் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த இயர்போனில் வயர்டு கனெக்டிவிட்டி, இன்-லைன் ரிமோட், மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்-லைன் ரிமோட் மற்றும் மைக்ரோபோன் தவிர ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன் மேக்னடிக் க்ளிப் உள்ளது. இதை கொண்டு இயர்போன் பயன்படுத்தாத சமயத்தில் சவுகரியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த இயர்போனுடன் மூன்று வித அளவுகளில் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன்களின் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை இயர்போன் ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. விற்பனை ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.