Advertisement
Realme Narzo 60 | 1TB ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் பெயரில் நார்சோ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது நிறுவனம் இந்த பெயரில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ரியல்மி நார்சோ 60 ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளில் விரைவில் காட்சிப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலில், போனில் கிடைக்கும் அதிரடி அம்சங்கள் குறித்த சிலத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி போனின் டிஸ்ப்ளே 61 டிகிரி கர்வேச்சர் திறனைப் பெறும் என்று நிறுவனத்தின் விளம்பர யுக்திகள் மூலம் தெரிகின்றன. இதுமட்டும் இல்லாமல், முதல் முறையாக 2 லட்சத்து 50ஆயிரம் புகைப்படங்களை சேமிக்க முடியும் எனவும் ரியல்மி தெரிவித்துள்ளது. நார்சோ 60 ஜூலை மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமாக 1டிபி ஸ்டோரேஜ், அதாவது 1000ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டுவரப்படும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், இது நார்சோ 60 சீரிஸ் ஸ்மார்ட்போனில் எந்த மாடலுக்கு பொருந்தும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், நார்சோ 60 ப்ரோ மாடலில் இந்த வசதி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 11 ப்ரோ மொபைலின் மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகும். நெருங்கும் மழை காலத்தில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு, புதிய நார்சோ போன் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி 11 ப்ரோ மொபைலின் அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

  • திரை: Realme 11 Pro ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட், 1080 X 2412 பிக்சல்கள், பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் 6.7-இன்ச் முழுஅளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
  • ப்ராசஸர்: மாலி-ஜி68 ஜிபியுவுடன் இணைந்த மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட் ஃபோனை இயக்குகிறது.
  • ஸ்டோரேஜ்: ஃபோன் 12ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் அதிகப்படுத்தலாம்.
  • இயங்குதளம்: ரியல்மி 11 ப்ரோ ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் கொண்டு இயங்குகிறது.
  • கேமரா: பின்புறத்தில் இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. இதில் எஃப்/1.75 கொண்ட 108எம்பி, OIS, 6P லென்ஸ் கொண்ட கேமராவுடன், 2 மெகாபிக்சல் டூயல் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள், வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
  • பேட்டரி: 67W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது.
  • இணைப்பு: 5G, 4G LTE, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST