முகமது ஷமிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் ட்வீட்! வைரல் ஆகிவருகிறது!!!

இந்திய அணியின் தோல்விக்கு முழு காரணம் முகமது ஷமிதான் என பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஷமி வீசிய 18ஆவது ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடைக்கப்பட்டன. இதனால், அந்த ஓவரிலேயே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இருப்பினும், அதற்கு முன்பே இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனாலும்கூட, முகமது ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால்தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை வெற்றிபெற செய்தார் என பலரும் விஷமத்தனமாக கூறி வருகின்றனர்.

இதற்கு பிசிசிஐ மற்றும் இந்திய அணி வீரர்கள் யாரும் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இதுதான் தற்போது புயலை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் ல் வெளியிட்டுள்ள செய்தியில் , இந்திய அணியை நாம் ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை போலவே, அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. நான் முகமது ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஷமிக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள் :
  Sachin   MohammadShami   SachinTendulkar   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇