மணமக்களுக்கு தக்காளி பரிசு.. ஆச்சரியப்படுத்திய விஜய் ரசிகர்கள்..!

வழக்கமாக வெங்காயம் விலைதான் அதிரடியாக உயர்ந்து மக்களை கண்ணீர் விட வைக்கும். ஆனால் இந்த முறை தக்காளி அந்த வேலையைப் பார்த்து வருகிறது. காய்கறிகளில் முக்கியமானது தக்காளி. குழம்பில் இருந்து ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி மயம் தான்.

அப்படிபட்ட தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்தது மக்களை திணற வைத்துள்ளது. விண்ணை தொடும் விலையினால் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது தக்காளி. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினர் விஜய் ரசிகர்கள்.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் மகேஸ்வரன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள், திடீரென மணமக்கள் மகேஸ்வரன், ஸ்ருதி ஆகியோருக்கு தக்காளிகளை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினர்.

  ThalapathyVijay   BreakingNews   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]