Advertisement
யார் இந்த காஜல் அகர்வால், புகழின் உச்சத்திற்கு எப்படி சென்றார், அவரின் பிறந்தாளான இன்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்  

காஜல் அகர்வால் ( பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இளமைக் கால வாழ்க்கை

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திரை வாழ்க்கை! ஆரம்ப காலம்!

இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை. பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார். இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார். இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.

புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)

2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஓடாத நிலையில், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன. இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012), சூர்யாவுடன், மாற்றான், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்திலும்  என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற்றது.

ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சித்ரா தேவி பிரியா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். குறிப்பாக இசை மழையில் நனைய தயாரா என்ற டைலாக் செம ஹிட். தனுஷ் உடன் இவர் நடித்த மாரி, ஜீவா உடன் இவர் நடித்த கவலை வேண்டாம், அஜித்துடன் இவர் நடித்த விவேகம், விஜய்யுடம் இவர் நடித்த மெர்சல் என அனைத்து படங்களுமே இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம். 

இவர் தனது நீண்டகால நண்பரான கௌதம் கிட்ச்லுவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்த ஜோடிக்கு 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியினர் தங்கள் மகனுக்கு நீல் கிட்ச்லு என்று பெயரிட்டு உள்ளனர். தொடர்ந்து காஜல் அகர்வால் தனது மகனின் படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இன்று காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST