Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் அமெரிக்காவின் Pinnacle Infotech நிறுவனதில் 3500 பேருக்கு வேலை ரெடி..!

தமிழ்நாட்டில் கடந்த வருடம் மதுரையில் அமெரிக்க நிறுவனமான pinnacle இன்போடெக் அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது. மதுரை ஐடி துறை வளர்ச்சியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் pinnacle இன்போடெக் நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். Pinnacle Infotech நிறுவனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலையிடமாக கொண்டு இயங்கினாலும் இந்தியாவில், அதுவும் மதுரையில் தனது உலகளாவிய மிகப்பெரிய இன்ஜினியரிங் சென்டர் ஆப் எக்ஸ்சலென்ஸ்-ஐ அமைத்துள்ளது. Pinnacle Infotech நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் குறித்த புகைப்படங்கள் டிவிட்டரில் பலர் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது பெரிய அலுவலகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த மதுரை அலுவலகம் சுமார் 287 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 3500 பேருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது. Pinnacle Infotech நிறுவனத்தின் புதிய அலுவலகம் மதுரையில் டெக் ஹப் ஆக விளங்கும், ஐடி ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐடி பார்க்-ல் கட்டப்பட்டு திறக்க தயாராகியுள்ளது. மேலும் இப்புதிய அலுவலகத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த இந்நிறுவனம் ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. Pinnacle Infotech Solutions நிறுவனம் கட்டிடகலை, இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான (AEC) நிறுவனங்களுக்குக் பில்டிங் இன்பர்மேஷன் மாடலிங் (BIM) தீர்வுகளை உலகளவில் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் BIM சேவைகளை திட்ட ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, சொத்து மேலாண்மை, இடர் குறைப்பு, தளவாட திட்டமிடல் மற்றும் செலவு மேம்படுத்தல் ஆகியவற்றை எளிதாக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இருந்து இயங்கும் Pinnacle Infotech நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இந்தியாவில் துர்காபூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், மதுரை ஆகிய இடத்தில் அலுவலகத்தை வைத்து சுமார் 40 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST