>>
53% வரை தள்ளுபடி- Samsung Galaxy s20 FE... எப்படி வாங்குவது? இதோ விவரங்கள்

ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சிறந்த நேரம்....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஜியோடேக் ப்ளூடூத் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.

ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.

ஜியோடேக் அம்சங்கள்:

ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.

ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.

ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.

விலை விவரங்கள்:

ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.

ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
64MP+32MP கேமராவுடன் மோட்டோரோலா ரேஸ்ர் 40 மொபைல் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் ரேசர் 40 மற்றும் மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ராவை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Xiaomi -ன் ஸ்டைலான போன் 14 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
OTP கேட்பதெல்லாம் பழைய ஸ்டைல்... மோசடி கும்பலின் புதிய ரூட் இதான்

யாரேனும் தெரியாத நபர் தொலைபேசியில் இது தொடர்பாக உங்களை தொடர்பு கொண்டால், உடனடியாக தொலைபேசியை துண்டித்து புகாரளிக்கவும்....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
புதிய லுக்கில் அறிமுகம் ஆகிறது OnePlus11!!

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் (OnePlus) நிறுவாம், மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது. நிறுவனம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 போனை புதிய பாணியில் வழங்க உள்ளது. ஒன்பிளஸ் 11 5ஜி இந்தியாவில் புதிய மாறுபாட்டைக் கொண்டுவரத் தயாராக உள்ளது. OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வரவுள்ளதாக ஒன்பிளஸ் பிராண்ட் அறிவித்துள்ளது. இதன் அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. 

COMMERCIAL BREAK

SCROLL TO CONTINUE READING

சீனாவில், இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பான OnePlus 11 5G ஸ்மார்ட்போன் ஜூபிடர் ராக் (Jupiter Rock) என்று அழைக்கப்படுகிறது. மேலும் அதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த தொலைபேசியின் வடிவமைப்பு வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

OnePlus 11 5G Marble Odyssey லிமிட்டட் எடிஷன்

OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பின் தோற்றம் சீனாவில் உள்ள ஜூபிடர் ராக் பதிப்பைப் போல உள்ளது. பின் பேனலின் நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிற ஷேட்களைக் கொண்டுள்ளது. தற்போது அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போன் பதிப்பும் ஸ்டாண்டர் ஆப்ஷனிலிருந்து வேறுபட்டது. 

மார்பிள் ஒடிஸி லிமிடெட் எடிஷன் ஒரு இயற்கையான அமைப்புடைய (நேசுரல் டெக்ஸ்சர்) பதிப்பாகும். இதில் மைக்ரோகிரிஸ்டலின் ராக் மெடீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஒவ்வொரு பகுதியும் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பைப் போல அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் நீர்ப்புகா மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு (வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஆண்டி-பாக்டீரியல்) அம்சங்கள் கொண்டதாகும்.

 

OnePlus 11 5G: விவரக்குறிப்புகள்

OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பின் முக்கிய விவரக்குறிப்புகள் மாறாமல் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் QHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு வீதம் 120Hz ஆகும். இதன் உச்ச பிரகாசத்தின் அளவு 1,300 nits ஆகும். இந்த மொபைல் போனில் 50MP பிரதான சென்சார், 48MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ யூனிட் ஆகியவற்றின் ஹாசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

OnePlus 11 5G ஆனது ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC இல் இயங்குகிறது. மேலும் இந்த போன் 16GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் ஆதரிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்:

அமேசானில் ஒன்பிளஸ் போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள்

OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 50MP பிரதான கேமரா மற்றும் Mediatek Dimensity 1300 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.28,999. அமேசானில் வாங்கினால், 2000 ரூபாய்க் நேரடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு மட்டுமே.

OnePlus 10R 5G போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகம் உள்ளது. இது 50MP பிரதான கேமரா, 6.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரியுடன் MTK D8100 Max செயலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது. HSBC வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

தொலைத் தொடர்பு நிறுவனமான Vi ( Vodafone Idea ) வரும் ஜூன் மாதம் முதல், இந்தியாவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக தகவல்! முன்னதாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5G சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மட்டும் 47 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. பயனாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முடக்கியதாக அந்நிறுவனம் அறிவிப்பு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Reliance Jio Plans: 11 மாதங்களுக்கு இனி ரீச்சார்ஜ் கவலையில்லை - ஜியோவின் மலிவான பிளான்..!

ஜியோ வாடிக்கையார்களை கவரும் வகையில் 11 மாதங்களுக்கான பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 28 )   NEXT |  LAST