>>
பிளிப்கார்டில் செம ஆஃபர்..! வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6ஏ மொபைல்

Flipkart offer: பிளிப்கார்டில் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை ரூ.28 ஆயிரத்தில் வாங்கலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிளிப்கார்டில் செம ஆஃபர்..! வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6ஏ மொபைல்

பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் ஆஃபர்

கூகுளின் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு இப்போது  மிகப்பெரிய  தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 7ஏ விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,000 வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கில் வேரியண்டில் வெளியிடப்பட்ட கூகுள் பிக்சல் 6ஏ, 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியுடன் ரூ.43,999-க்கு விற்பனையாகிறது. வழக்கமான நாட்களில் மட்டுமே இந்த விலை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஃபரில் ரூ.28,999 விலையில் பிளிப்கார்டில் கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 6A தள்ளுபடி 

அதாவது கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை அதன் வெளியீட்டு விலையை விட ரூ.15,000 குறைவாக வாங்கலாம். பல வங்கிச் சலுகைகளும் Flipkart கூகுள் பிக்சல் 6 மொபைலுக்கு அறிவித்துள்ளது. SBI கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். HDFC வங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகளுடன், கூகுள் பிக்சல் 6A வெறும் ரூ.27,999க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கினால், 5 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். EMI சலுகை ரூ.9,667 முதல் தொடங்குகிறது. 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. பழைய மொபைலுக்கு ரூ. 27,250 வரை ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. ஒருவேளை உங்கள் பழைய ஸ்மார்ட்போன் இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு எக்ஸ்சேஞ்ச் காஷ்பேக் ஆஃபரை முழுமையாக நீங்கள் பெற்றால், வெறும் 300 ரூபாய்க்கு கூகுள் பிக்சல் 6 மொபைலை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

கூகுள் பிக்சல் 6A சிறப்பம்சம்

கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன் (Specs)  60Hz அப்டேட்டுடன்  6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கண்ணாடி வடிவமைப்புடன் வருகிறது. கூகுளின் சொந்த டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 மெகாபிக்சல் பிரதான கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராக்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 8 மெகாபிக்சல் ப்ரண்ட் கேமரா உள்ளது. 4306 mAh பேட்டரி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 OS உடன் வேலை செய்கிறது. Android 13 அப்டேட் விரைவில் வரும். செயலிகளை பொறுத்தவரை கூகுள் ஆப்ஸ் தவிர வேறு எந்த செயலிகளும் இதில் இல்லை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
Lava Blaze 2: ரூ. 10,000 -க்கும் குறைவான விலை, விற்பனை ஆரம்பம், முந்துங்கள்

Lava Blaze 2: நேற்று முதல் இந்த போனை அமேசான் இந்தியா மூலம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்..! இதோ உங்களுக்கான லிஸ்ட்!!!

உங்களது பட்ஜெட் 12,000 ரூபாய் என்றால், சிறந்த அம்சங்களைக் கொண்ட ஒரு சில மொபைல் போன்களின் பட்டியலைக் கொடுத்துள்ளோம்.. அவற்றில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மொபைலில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுப்பது எப்படி..? ஈஸியான வழிமுறை இதோ...!

சில நேரங்களில் நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகளினால் போட்டோக்கள் அனைத்தையும் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் உண்டு....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஒரு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்த Realme..! அப்படி என்ன ஸ்பெஷல்?

ரியல்மீ நிறுவனம் கடந்த வாரம் Realme C55-ஐ அறிமுகப்படுத்தியது, இதன் விற்பனை மார்ச் 28 முதல் தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 100,000 Realme ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி அனைத்து விற்பனை சாதனைகளையும் முறியடித்துள்ளது. மார்க்கெட்டில் விற்பனையில் கோலோச்சிய Realme C55-ன் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்து கொள்வோம். 

Realme C55 சாதனை

Realme C55 சாதனம் விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட 5 மணி நேரத்தில் 100,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. இது மட்டுமல்லாமல், C55 மாடலுக்கு 66,000 முன்கூட்டிய ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் ரியல் மீ நிறுவனம் கூறியிருக்கிறது. இது Realme C தொடர் ஸ்மார்ட்போன்களில் ஒரு சாதனத்திற்கு இதுவரை இல்லாத அதிகபட்சமாகும் டிமாண்ட் ஆகும்.

Realme C55 விவரக்குறிப்புகள்

Realme C55 ஆனது 6.72-இன்ச் உயரமான FHD+ LCD பேனலைக் கொண்டிருக்கிறது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது மற்றும் 8-மெகாபிக்சல் பஞ்ச் ஹோல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio G88 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 8GB மற்றும் 128GB உள் சேமிப்பகத்தை எக்ஸ்டன்ஸன் செய்து கொள்ளலாம். 

இந்தியாவில் realme c55 விலை

ரியல்மீ சி55 அடிப்படை மாடல் ரூ.10,499-ல் தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் 4GB + 64GB மாறுபாட்டிற்கு 500 கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் 8GB + 128GB உள்ளமைவு 1,000 INR தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் நிறுவனத்தின் வெளியீட்டு விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வெறும் 13 ஆயிரத்திற்கு ஐபோன் - அதிரடி விலை குறைப்பில் அசத்தல் விற்பனை!

IPhone On Low Price: தற்போது வட இந்தியாவில் பண்டிகை தினங்கள் என்பதால் பிளிப்கார்ட் நிறுவனம் சலுகையுடன் கூடிய பெரிய விற்பனையை நடத்தி வருகிறது. இதில், ஐபோன் 11 மாடல் தற்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. 

எப்படி இருக்கும் ஐபோன் 11?

2019 ஆம் ஆண்டில் ஐபோன் 11 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது இன்றுவரை அதிகம் விற்பனையாகும் மாடலாகும். இந்தத் தொடர் வளைந்த விளிம்புடன், 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இது A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது பின்புறத்தில் 12MP டூயல் சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 12MP செல்ஃபி ஷூட்டர் கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 5ஜி, விற்பனையில் ஈடுபட்டதால் ஆப்பிள் ஐபோன் 11 மாடலின் தயாரிப்பை கடந்தாண்டு அந்நிறுவனம் நிறுத்தியது. ஆப்பிள் ஐபோன் 11 மாடல் இப்போது மலிவு விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போனாக கிடைக்கிறது. வருடாந்திர பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. 

 

நீங்கள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தாலும், குறைந்த பட்ஜெட்டைக் கொண்டிருப்பதால், நீங்கள் நிச்சயமாக ஆப்பிள் ஐபோன் 11 மாடலை பரிசீலிக்கலாம். இது நவராத்திரியின் (வட இந்தியாவில் தற்போது சைத்ர நவராத்திரி கொண்டாடப்படுகிறது) போது பிளிப்கார்டில் வெறும் 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஐபோன் 11 சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 11 ரூ.2,901 தள்ளுபடியுடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. அதன் பிறகு போனின் விலை ரூ.40,999 ஆக உள்ளது. கூடுதலாக, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10% வரை ரூ.1,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் சாதனத்தின் விலை ரூ.39,999 ஆகக் குறைக்கப்படுகிறது. அதன் பிறகு ரூ.27 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.27 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் கிடைக்கும். ஆனால் போனின் கண்டிஷன் நன்றாக இருக்கும் மாடல் லேட்டஸ்ட்டாக இருந்தால்தான் 27 ஆயிரம் முழு தொகை கிடைக்கும். நீங்கள் முழுமையாக அதனை பெற முடிந்தால், போனின் விலை ரூ.12,999 ஆக இருக்கும். ஆப்பிள் ஐபோன் 11 மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும், மேலும் இது ஆப்பிள் ஐபோன் 14 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு நிறுத்தப்பட்டது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரூ.18000 realme ஸ்மார்ட்போன் வெறும் ரூ.599-க்கு கிடைக்கிறது.. மிஸ் பண்ணிடாதீங்க..

அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வீசும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்போது ஒரு பம்பர் ஆஃபரை அறிவித்திருக்கிறது. அட ஆமாங்க, Realme 9i 5G ஸ்மார்ட்ஃபோனை வெறும் 599 ரூபாய் தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்கிறது ஃபிளிப்கார்ட். இந்த செம்ம வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. எப்படிங்க வாங்குறது? 

 

ரியல்மீ பிளிப்கார்ட் தள்ளுபடி:

 

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் உண்மையான விலை Flipkart-ல் ரூ.17,999. ஆனால், வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட்போனை இந்த விலைக்கு வாங்க வேண்டியதில்லை. ஏனென்றால், ஃபிளிப்கார் ஏற்கனவே 16% தள்ளுபடி வழங்கியுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை ரூ. 14,999 ஆகும். 

 

இந்த விலை ஸ்மார்ட்ஃபோனின் அசல் விலையை விட ரொம்பவே கம்மி. பெரும்பாலான வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கும் இது பொருந்தும். ஒருவேளை இதுவும் விலை அதிகம்ப்பா என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு பம்பர் ஆஃபர் இருக்கிறது.

 

ரூ.599 க்கு Realme 9i 5G:

 

Realme 9i 5G ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஃபிளிப்கார்ட்டில் இருந்து ரூ. 14400 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும். அதாவது, உங்களுடைய பழைய ஃபோனை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது தான் இந்த போனஸ் உங்களுக்கு கிடைக்கும். 

 

நீங்கள் இந்த எக்ஸ்சேஞ்ச் போனலை முழுமையாக பெற்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ.14,400 குறைக்கப்படும். அதன் பிறகு நீங்கள் வெறும் ரூ.599 மட்டுமே செலுத்தி ரியல்மீ நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

 

Realme 9i 5G அம்சங்கள் (Specifications):

 

பிராண்ட் - Realme

மாடல் - 9i 5 ஜி

Dimensions (mm) - 164.40 x 75.10 x 8.10

எடை (g) - 187.00

பேட்டரி திறன் - (mAh) 5000

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

கலர்ஸ் - மெட்டாலிகா கோல்ட், ராக்கிங் பிளாக், சோல்ஃபுல் ப்ளூ

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 4 of 28 )   NEXT |  LAST