Red alert for which districts...Here is the latest weather update!

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...லேட்டஸ்ட் வானிலை அப்டேட் இதோ!

நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று (நவ.14) காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நிலவக்கூடும். இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாக வரும் 16ஆம் தேதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும்.

அடுத்து வரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள 6 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.14) கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, இன்று மிதமான நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்யக்கூடும். நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Heavy rain echo!

கனமழை எதிரொலி! 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர கடிதம்! விவரம் தெரியுமா?

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது”தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம் எழுதி உள்ளதுதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, கறம்பகுடி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களை கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு முறைகளை கடைப்பிடிக்கவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுவடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of heavy rain in 9 districts

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (14.11.2023) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு - வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதனையடுத்து மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.இன்று (12.11.2023) தமிழ்நாடு கடலோர பகுதி, மன்னார் வளைகுடா அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வங்கக்கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு பகுதி, அந்தமான கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். நவம்பர் 15 ஆம் தேதி வங்கக்கடலின் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of heavy rain

கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 14ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Heavy rain to whiten in Tamil Nadu today..Meteorological Center Alert!

தமிழகத்தில் இன்று வெளுக்கபோகும் கனமழை.. வானிலை மையம் அலெர்ட்!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து வலுவான கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரியில்  2 நாட்களுக்கு அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தவிர தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Heavy rain warning in 12 districts...!

12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை...!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தங்களுக்கு இருக்கை வழங்காமல் அவமதிக்கவில்லை இது தற்செயலாக நடந்த சம்பவம் என ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் விளக்கமளித்துள்ளார். 

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமைக்குழு   பிரிவு மத்திய மண்டலம் சார்பாக வருகின்ற ஞாயிறு காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுத் தந்தது கலைஞரின் அரசியல் பணியா? கலை இலக்கிய பணியா? என்ற தலைப்  பில் நடுவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் இந்த பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இந்த பட்டிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வா வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் செஞ்சி மஸ்தான், கழக துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அந்தியூர் செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தொழில்துறை அமைச்சர் டி ஆர்   பி ராஜா, சிறுபான்மை நல உரிமை குழு மாநில தலைவர் சுபேதார்கான் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.

மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்  பினருமான கௌதம சிகாமணி இந்த பட்டிமன்றத்தை துவக்கி வைக்கிறார். ஆதி திராவிடர் நல குழு செயலாளர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்  பினருமான ஆர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், புஷ்பராஜ், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்  பினரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த நிகழ்ச்சி தொடர்பாக நேற்று முன் தினம் காலை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின்  விழுப்புரம் இல்லத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வி  பி இராசன் அமைச்சர் பொன்முடியுடன் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து விழா பத்திரிகையை வழங்கி விழா குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்த பொழுது, அமைச்சர் பொன்முடி இருக்கையில் அமர்ந்தபடியும் பத்திரிக்கை வழங்க சென்ற முன்னாள் எம்எல்ஏ    வி.  பி.  இராசன், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்டவர்கள் உட்கார நாற்காலிகள் வழங்கப்படாமல் அமைச்சர் முன்பு குனிந்து நின்று இருந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக இன்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்  பினருமான புஷ்பராஜ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்:-

“நானும் ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்  பினருமான வி.  பி இராசன் அவர்களும், அமைச்சர் பொன்முடியை அவரது இல்லத்தில் சந்திக்க சென்ற பொழுது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு காலில் லேசான காயம் இருந்த காரணத்தால் அவர் காலில் மருந்து தடவிக் கொண்டு அப்படியே வெளியில் வந்து எங்களை சந்தித்தார். 

அவரிடம் வி  பி ராசன் உடல்நலம் குறித்து  விசாரித்தபோது   பி  பி ராஜன் மகனால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம் இதில் எந்த சர்ச்சையும் இல்லை, அவர் எங்களுக்கு இருக்கை வழங்காமல் அவமதிக்கவில்லை.

இது தற்செயலாக நடந்த சம்பவம். அதன்   பின்பு நாங்கள் ஒன்றாக இருக்கையில் அமர்ந்து பேசிவிட்டு அமைச்சரின் இல்லத்தில் உணவருந்தி விட்டு தான் அங்கிருந்து கிளம்  பிச் சென்றோம்”,  என விளக்கம் அளித்து பேட்டி அளித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Alert people!: Heavy rain warning for 10 districts

உஷார் மக்களே!: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை:விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (செப்.,26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று(செப்.,26) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 


இது தொடர்பாக, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு 29ல் உருவாகிறது. 30ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாக 29ல் உருவாகும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Rain will fall in 7 districts today: Chennai Meteorological Department warns..!

இன்று 7 மாவட்டங்களில் மழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 

கீழடுக்கு காற்றின் திசை வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

 

குறிப்பாக நேற்று இரவு திடீரென சென்னையில் கன மழை பெய்தது என்பது இதனால் இன்று காலை வரை சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Heavy rain warning for 9 districts!!

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

சென்னை:கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும்; ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. திருப்பத்துார், விருதுநகர் 6; திருமானுார், மொடக்குறிச்சி, சிவகங்கை, பட்டுக்கோட்டை 5; பேரையூர், பரமத்திவேலுார், அருப்புக்கோட்டை, 4; திண்டுக்கல், கரூர் பரமத்தி, உசிலம்பட்டி, திருக்காட்டுப்பள்ளி 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளது. இதனால், பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 4 of 116 )   NEXT |  LAST