A new low pressure area is forming tomorrow- Tamil Nadu is likely to receive heavy rain on 29th!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது- தமிழகத்தில் 29-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of heavy rain today - Meteorological Department warning

இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (26.11.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நாளை (27.11.2023) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை உருவாகும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும். இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதே சமயம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நாளை மறுநாளுக்குள் (28.11.2023) கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

A new low pressure area is forming - Heavy rain will lash these 7 districts

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்த 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை

தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதன் காரணமாக, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் மாலை வேளையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. அப்ச‌ர்வேட்ட‌ரி, பேருந்து நிலையம், அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஆன‌ந்த‌கிரி, க‌ல்லுக்குழி, நாயுடுபுர‌ம், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், சேரன்மகாதேவி அருகே கூனியூரில் சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி, சாலையில் வெளியேற்றினர். இது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரேஷன் கடையை சூழ்ந்திருப்பதால் அந்தப் பகுதிகளில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையம் மற்றும் ரேசன் கடையை சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு… தென்காசி மாவட்ட மழை நிலவரம் இதோ.!

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Yellow alert for 10 districts!!

10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

திருவனந்தபுரம், கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை- தமிழகம் இடையே புயல் சுழற்சி வலுப்பெற்றதால் தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு கனமழையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்தாலும் திருவனந்தபுரம் மாவட்டம் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு கடுமையாக பெய்த மழையின் காராணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பார்வதி புத்தனாறு, பட்டம் கால்வாய்கள் நிரம்பியதால் தண்ணீர் மறுகால் பாய்ந்தது.

தெக்கமூடு பண்ட் காலனி, கவுரீசப்பட்டம், முறிஞ்சாபாலம் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசிப்பவர்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் மின் தடையும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்திலும் கனமழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்தில் 210 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோட்ட தட்டி, சென்னீர்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சபரிமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்கவும், அவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சபரிமலையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட கலெக்டர் ஷிபு அறிவுறுத்திஉள்ளார். அதே நேரம் சபரிமலை பக்தர்கள் அல்லது யாத்திரை பயணங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 28-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Continuous heavy rain;

தொடர் கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் கனமழை காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக இன்று (23.11.2023) ஒரு நாள் மட்டும் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (23.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

 

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

A new low pressure area is forming.. Rain will continue for the next 2 days!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.

22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.11.2023 முதல் 28.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்:

22.11.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்:

22.11.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.11.2023: தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Heavy rain to lash 9 districts in Tamil Nadu today - Today's Weather Alert

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை - இன்றைய வானிலை அலெர்ட்

நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை புதன்கிழமை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் இதேபோல் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் வியாழக்கிழமை மிககனமழை வரை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News:  கூகுள் செய்திகள்  பக்கத்தில்  நியூஸ்18 தமிழ்  இணையதளத்தை  இங்கே  கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும், இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of heavy rain in 6 districts of Tamil Nadu today..!

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைபோல புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Chance of rain in 12 districts of Tamil Nadu!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் கூறியதாவது, 

அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக உருப்பெற்றது. இந்த புயல் மோங்கா கொபுரா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்றும், கரையைக் கடக்கும் போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகலே கரையைக் கடக்க தொடங்கிய  மிதிலி புயல் 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்கதேசம் அருகே இரவில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்று வீசியதுடன் கடலோரப் பகுதியில் கனமழை பெய்தது கரையைக் கடந்த மிதிலி புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

New Cyclone 'Mithili' - India Meteorological Department Notification

புதிய புயல் 'மிதிலி' - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை புயல் உருவாகும் பட்சத்தில் அந்த புயலுக்கு மிதிலி (Midhili) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு கொடுத்த பரிந்துரையின் பேரில் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிஸா மாநிலத்திற்குச் செல்லும் பொழுது மழைக்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக வங்கதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5.30 நிலவரப்படி 18 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறைவு. தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டத்தை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 116 )   NEXT |  LAST